பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/759

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Installation time

758

Institute for


வாறு சரியாக வைக்க முடியும் என்பதைக் கூறும் கருவி உற்பத்தியாளரின் விளக்கக் குறிப்பு.

installation time : :நிறுவு நேரம் : நிறுவுதல், சோதித்தல் மற்றும் தட்டச்சுப் பொறிபோல அந்த முறைமையைப் பயன்படுத்தி ஏற்றுக் கொள்வதற்கான நேரம்.

installer : இன்ஸ்டாலர்;நிறுவுனர்;நிறுவி : ஆப்பிள் மெக்கின்டோஷ் இயக்க முறைமையுடன் தரப்படும் ஒரு நிரல். பின்னாளில் தரப்படும் முறைமை மேம்பாட்டுக் கூறுகளை கணினியில் நிறுவிக் கொள்ளவும், முறைமை இயக்கு வட்டுகளை (Bootable disks) உருவாக்கவும் இந்த நிறுவி நிரல் பயனாளருக்கு உதவுகிறது.

installing software : நிறுவு மென்பொருள்.

Instance : சான்று;பொருள்;உறுப்பினர் : பொருள் சார்ந்த நிரல் தொடரமைப்பில், ஒரு வகுப்பின் உறுப்பினர். சான்றாக 'நாய்' என்ற வகுப்பிற்குச் சான்றாக பொமேரியன், லேஸ்ஸி போன்றவைகளைக் கூறலாம். ஒரு சான்று உருவாக்கப்பட்டவுடன், அதன் ஆரம்ப மதிப்புகள் அளிக்கப்படுகின்றன.

Instance variable : சான்று மாறிலி : ஒரு பொருளில் உள்ளதரவு. பொருள் சார்ந்த நிரல் தொடர் அமைப்பில் பயன் படுத்தப்படுவது.

instantaneous : அப்போதே.

Instantiate : சான்றாக்கல்;பொருள் உருவாக்கம் : ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த பொருளை உருவாக்கல். பொருள் சார்ந்த நிரல் தொடர மைப்பில் பயன்படுத்தப்படுவது.

instant message : உடனடிச் செய்தி.

instant on modem : உடனடி இயக்க இணக்கி.

instant print : உடனடி அச்சு.

Institute for Certification of Computer Professionals (ICCP) : கணினி வல்லுநர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிறுவனம் : கணினியைப் பயன்படுத்தும் ஊழியர்களைச் சோதித்து அவர்களின் அறிவு மற்றும் திறன் களுக்குச் சான்றிதழ் வழங்கும் லாப நோக்கற்ற நிறுவனம். இதன் நோக்கம், குறிப்பிட்ட சமூகத்தில் உள்ள திறனாளிகளை ஒருங்கு திரட்டுவதாகும். அதன் மூலம் தரவுகளை, செயலாக்கும் தொழிலின் முழுக் கவனத்தையும், தகுதியுள்ளவர்களை உருவாக்கவும் மற்றும் தகுதி உள்ளவர்களை அங்கீகரிக் கவும் குவி முனைப்படுத்து வதாகும்.