பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/760

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Institute of Electrical

759

Instruction cycle


Institute of Electrica and Electronics Engineers Computers Society (IEEECS) : மின்னியல், மின்னணுவியல் பொறியாளர்கள் கணினிகள் கழகம் : மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் நிறு வனத்தில் கணினி சிறப்புக் குழு கணினி விவரணம் மற்றும் செயல்பாடு மற்றும் தகவல் செயலாக்க தொழில் நுணுக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் முன்னோடித் தொழில் வல்லுநர்கள் சங்கம். மூன்று பரி மாற்றங்களையும் மூன்று இதழ்களையும் வெளியிடுகிறது. உலகின் பல பகுதிகளிலும் உள்ள அதன் 62, 000 உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பையும் நவீனத் தகவல் பரிமாற்றத்தையும் ஊக்குவிக்கிறது.

Instruction : ஆணை;கட்டளை;அறிவுறுத்தம் : கணினி செய்ய வேண்டிய நடவடிக்கை ஒன்றை வரையறை செய்யும் சொல் அல்லது சொல் தொடர். வழக்கமாக இவை இயக்குக் குறியீடு மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயக்க ஆணைகளைக் கொண்டதாக இருக்கும்.

instruction address : ஆணை முகவரி.

Instructional computing : கல்விக் கணினி ஆற்றுப்படுத்துதல் : கணினி அறிவியலின் பல்வேறு பகுதிகள் மற்றும் தரவு செயலாக்கம் குறித்து தனிப் பட்டவர்களுக்கு கற்பிக்கும் நடைமுறை.

instruction, arithmetical : எண்கணித ஆணை.

instruction, branch : கிளைபிரி ஆணை.

instruction, break point : நிறுத்துமிட ஆணை.

instruction code : ஆணைக் குறிமுறை;கட்டளைக் குறியீடு : இயக்கக் குறியீடு போன்றது.

instruction, computer : கணினிக் கட்டளை, கணினி ஆணை.

instruction, conditional branch : நிபந்தனைக் கிளை ஆணை.

Instruction counter : நிரலாக்கத் துறை;கட்டளைத் துறை : உணரப்பட வேண்டிய கணினிக் கட்டளையின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டும் துறை. நிரலாக்கத் தொகுப்புத் துறை போன்றதே.

Instruction cycle : ஆணைச் சுழற்சி;கட்டளைச் சுழற்சி : கட்டளை ஒன்றை நெறிப்படுத்தத் தேவைப்படும் நேரம். உள் சேமிப்பிலிருந்து தேவைப்படும் கட்டளையைக் கொண்டு வருதல், கட்டளைக் குறியீட்டை உணர்தல். கட்டளையை