பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/761

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

instruction, data manipulation

760

Instruction set


நிறைவேற்றுதல். கட்டளை நேரத்துடன் ஒப்பிடவும்.

instruction, data manipulation : தரவு கையாளல் கட்டளை.

instruction, fetch : கொணர் ஆணை.

Instruction format : ஆணைப் படிவம்;கட்டளைப் படிவு : கணினி கட்டளை ஒன்றின் அமைப்பு மற்றும் அமைப்புக் கிரய முறை.

instruction format, addressless : முகவரியிலா ஆணை வடிவம்.

instruction, halt : நிறுத்தக் கட்டளை;நிறுத்தல் ஆணை.

instruction, jump : தாவு கட்டளை;தாவல் ஆணை.

Instruction length : ஆணை நீளம் : முதன்மை நினைவகத்தில் ஒரு ஆணையைச் சேமிக்கப் பயன்படுத்தப்படும் சொற்கள் அல்லது எட்டியல்கள் எண்மிகள் (பைட்டுகள்).

instruction look/ahead : ஆணை பார் : ஒரு ஆணையை இயக்கும்போது வேறொரு ஆணையைக் கொண்டு ஐந்து குறியீடு மாற்றல்.

instruction, machine : எந்திர ஆணை;பொறி ஆணை.

Instruction mix : ஆணைக் கலவை : ஒரு நிரல் தொடரில் ஆணை வகைகளைக் கலப்பது. பொதுவான தேர்வுக்குறி'பெஞ்ச் மார்க்கு'களை எழுதுவதைக் குறிக்கிறது. உள்ளீடு/வெளியீடு செயலாக்கம், கணித ஆணைகள் போன்றவற்றை ஒன்றோடொன்று கலப்பது எத்தகைய பயன்பாட்டுக்காக தேர்வுக்குறி பெஞ்ச் மார்க்'எழுதப்பட்டது என்பதை விளக்க உதவும்.

instruction, null : வெற்று ஆணை.

Instruction pointer : ஆணைக் காட்டி;ஆணை சுட்டு : அடுத்து இயக்கப்பட வேண்டிய ஆணையை அணுக உதவும் மதிப்பினைக் கொண்டுள்ள பதிவகம்.

Instruction register : ஆணைப் பதிவகம்;கட்டளைப் பதிவேடு : வன்பொருள் பதிவேடு. செயலுக்கான கட்டளையை சேமிக்கிறது.

instruction register, current : நடப்பு ஆணைப் பதிவகம்.

Instruction set : நிரலாக்கத் தொகுதி;நிரலாக்கத் தொகை;கட்டளைத் தொகுப்பு : ஒரு குறிப்பிட்ட கணினி அல்லது கணினிக் குடும்பத்துக்கு விற் பனையாளரால் வழங்கப்பட்ட குறியீடுகள். Repertoire போன்றது.