பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/763

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Integer BASIC

762

integrated Data Processing


integer BASIC : முழு எண் அடிப்படை : முழுமையான எண்களை மட்டும் கையாளக்கூடிய அடிப்படை மொழி வகை. எடுத்துக் காட்டு : 1-ஐ 3-ஆல் வகுத்தால் கிடைக்கும் விடை 0. 33333-க்கு பதிலாக 0ஆக இருக்கும்.

integer type : முழு எண் இனம்.

Insteger variabie : முழு எண் மாறி;முழு எண் மாறியல் மதிப்புரு : எந்தவொரு முழுமையான எண்ணுக்கும் சமமான அளவு மற்றும் பல மதிப்பீடுகளை வழக்கமாக ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் (அது எல்லை யற்றதாகவும் இருக்கலாம்) ஏற்கக் கூடியதாகவும் அமையும்.

integral modem : ஒருங்கிணை இணக்கி : கணினிப் பெட்டிக்குள் தாய்ப்பலகையிலேயே பொருத்தப்படுகிற இண்க்கி. தாய்ப்பலகையிலுள்ள செருகு வாய்களில் பொருத்தப்படும் விரிவாக்க அட்டையாக (Expansion Card) இது இருக்கும்.

Integrate : ஒருங்கிணை : ஒரு ஒருங்கிணைந்த கணினி முறைமையை உருவாக்க பல்வேறு உறுப்புகளை ஒன்றாக இணைக்கும் நடைமுறை.

Integrated banking system : ஒருங்கிணைந்த வங்கி அமைப்பு : சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு போன்ற அன்றாட செயல்பாடுகளை தானியங்கியாக இயக்கும் இந்திய மென்பொருள்.

integrated chips : ஒருங்கிணைந்த சிப்புகள்;ஒருங்கிணைந்த சில்லுகள்.

Integrated circuit- (IC) : ஒருங்கிணைந்த மின்சுற்று (ஐசி) : ஒரு அரைக் கடத்தி சிப்பில் உருவாகும் குறு மின்சுற்று. தொகுப்பில் பொருத்தப்பட்டதும் இயக்கத்துக்கு தயாராக இருக்கும் சிப்பு. இது உதிரியாக உள்ள பாகங்களுக்கு எதிரானது.

Integrated circuit chips : ஒருங்கிணைந்த மின்சுற்று வழிச் சிப்பு.

Integrated circuits (ICA) : ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகள்; ஒருங்கிணைந்த சுற்றுகள்.

Integrated computer package : ஒருங்கிணைந்த கணினித் தொகுப்பு : ஒருங்கிணைந்த நிரல் தொகுப்பு என்பதைப் பார்க்கவும்.

Integrated Data Processing-IDP : ஒருங்கிணைந்த தரவுகளை முறைப்

படுத்துதல்-ஐடிபி : தரவுகளை முறைப்படுத்தும்