பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/764

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

integrated development

763

integrated services


முறை. இதில் பெறப்பட்ட தரவுகள் மற்ற நிலையில் உள்ள தரவுகளுடன் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த முறைமையாக உருவாக்குதல். எடுத்துக்காட்டு : வணிகத் தரவுகளை முறைப்படுத்தும் முறை. இதில் விற்பனைத் தரவுகள் கொள்முதல் விபரங்களுடன் இணைக்கப்பட்டு அடுத்த கொள்முதலுக்கான நிரல்களைத் தயாரிக்கவும் கனக்குகளைத் தயாரிக்கவும் பயன்படுகிறது.

integrated development environment : ஒருங்கிணைந்த உருவாக்கச் சூழல் : ஒரு மென்பொருளை உருவாக்கத் தேவையான அனைத்துக் கருவிகளின் தொகுதி. அனைத்துக் கருவிகளும் ஒரே பயனாளர் இடை முகத்தில் இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். நிரல்களை எழுதுவதற்கான ஒர் உரைத் தொகுப்பான் (text editor), மொழிமாற்றி (compiler), பிழைதிருத்தி (debugger), நிரலை இயக்கிப் பார்த்தல் ஆகிய அனைத்தும் பட்டி விருப்பத் தேர்வுகள் (menu options) மூலம் இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

integrated injection Logic (iil) : ஒருங்கிணைந்த உட்செலுத்தி அளவை : நடுத்தரச் செயல்பாடும் குறைந்த மின்சக்தி நுகர்வும் பெற இரு துருவ மின்மப் பெருக்கிகளைப் பயன்படுத்தும் ஒரு மின்சுற்று வடிவமைப்பு.

integrated learning system : ஒருங்கிணைக் கற்றல் முறைமை.

integrated news : ஒருங்கிணைந்த செய்தி.

integrated programmes : ஒருங்கிணைந்த நிரல் தொகுப்புகள் : தங்களுக்குள் தரவுகளை சுதந்திரமாகப் பரிமாறிக் கொள்ளும் நிரல் தொகுப்புக் குழு. எ. கா. சொல்செயலி, தரவுத் தள மேலாண்மை, மின்னணுவியல் விரிதாள் மற்றும் தரவுத் தொடர்பு நிரல் தொகுப்பு ஆகியவற்றைக் கொண்ட மென்பொருள் சிமிழ். மின்னணுவியல் விரிதாளும் தரவு மேலாளரும் தரவுவை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம். பயனாளர் சொல் முறைப்படுத்தும் ஆவணங்களையும் மின்னணுவியல் விரிதாளையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கையாளலாம்.

Integrated services digital network : ஒருங்கிணைந்த சேவைகளின் இலக்க முறை பிணையம் : குரல், தரவு மற்றும் ஒளி தரவு தொடர்புகளை பிணைக்கும் பொதுவான தாங்கியை வழங்