பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/765

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

integrated software

764

integrity class


கும் சேவை. ஐ. எஸ். டி. என். என்று சுருக்கி அழைக்கப்படுகிறது.

integrated software : ஒருங்கிணைந்த மென்பொருள் : சொல்செயலி, தரவுத் தள மேலாண்மைத் தொகுப்பு, விரி தாள் போன்ற அனைத்துப் பயன்பாட்டு மென்பொருள்களையும் ஒருங்கிணைந்த கூட்டுத் தொகுப்பு (Suite), அனைத்துப் பயன்பாட்டுத் தொகுப்புகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியான பயனாளர் இடைமுகத்தைக் கொண்டிருக்கும். வெவ்வேறு தொகுப்புகளுக்கு வெவ்வேறு கட்டளைகளை நினைவு வைத்துக் கொண்டு பணியாற்ற வேண்டியதில்லை. பயன்பாடுகளுக்கிடையே தகவலை, இயக்க நேரத்தில் பரிமாறிக் கொள்ளவும் (Dynamic Data Exchange) இக்கூட்டுத் தொகுப்புகளில் வழிவகை இருக்கும். மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் 2000, சன் ஸ்டார் ஆஃபீஸ், லோட்டஸ் ஸ்மார்ட் சூட், கோரல் ஆஃபீஸ் ஆகியவை இத்தகைய கூட்டுத் தொகுப்புகள்.

Integrated software package : ஒருங்கிணைந்த மென்பொருள் பணித் தொகுப்புகள் : பல பயன்பாடுகளை ஒரே நிரல் தொடரில் இணைக்கும் மென்பொருள். தரவுத்தள மேலாண்மை, சொல் செயலி, விரிதாள், வணிக வரைகலை மற்றும் தரவுத் தொடர்பு ஆகியவை இதில் அடங்கும். வெட்டி ஒட்டுதலையும் செய்ய முடியும். தனியாக நின்று செய்யும் பயன்பாடுகளின் திறன்களை எந்த ஒரு தொகுப்பும் தர முடியாது. சான்று பிரேம்வொர்க், ஆப்பிள் வொர்க் மற்றும் மைக்ரோ சாஃப்ட் வொர்க்.

Integration : ஒருங்கிணைப்பு : பல்வேறு விற்பனையாளர்களிடம் பெறப்பட்ட வேறுபட்ட வன்பொருள்களையும், மென்பொருள்களையும் ஒரு ஒருங்கிணைந்த முறைமையாக இணைத்தல்.

integrator : ஒருங்கிணைப்பான்;ஒருங்கிணைப்பி : ஒரு மின்சுற்று. நேரத்தின் அடிப்படையில் உள்ளீடாகப் பெறும் மின்னோட்டத்தின் தொடர்கூட்டு மதுப்பை (accumulated value) வெளியீடாகத் தரும்.

integrity : ஒருங்கியைபு;ஒருங்கமைப்பு;இணக்கம் : நிரல் தொகுப்புகளை அல்லது தரவுகளை அவை உருவாக்கப்பட்ட நோக்கத்துக்காகப் பாதுகாத்தல்.

integrity class : ஒருங்கிணைந்த வகுப்பு;ஒருங்கிணைந்த இனக்குழு.