பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/766

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

integrity confinement

765

Intelligent controller


integrity confinement : ஒருங்கமைப்பு வரையறை.

integrity context : ஒருங்கமைப்புச் சூழல்.

integrity control : ஒருங்கமைப்புக் கட்டுப்பாடு.

integrity label : ஒருங்கிணைந்த முகப்பு;ஒருங்கமைப்புச் சிட்டை.

integrity tower : ஒருங்கமைப்புக்கோபுரம்.

integrity upgrading : ஒருங்கிணைந்த மேம்படுத்தம்.

Intel corporation : இன்டெல் அமைவனம் : முதல் நுண் செயலியை 4 பிட் 4004-ஐ உருவாக்கிய நிறுவனம். இப்பொழுது பல்வேறு வகையான நுண்செயலிகளைத் தயாரிக்கிறது. அவை பெரும்பாலான புகழ்பெற்ற நுண்கணினிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

Intellect : அறிவார்ந்த; அறிவாற்றல் : செயற்கை அறிவுக் கார்ப்பரேஷன் ஒன்றின் வணிக இலச்சினை. அந் நிறுவனம் இயற்கையான மொழியை வினா மொழியாக மாற்றக் கூடிய முறைமையை உருவாக்கியதாகும். தினசரி வாழ்க்கை மொழியில் பயனாளர் முன் வைக்கும் கோரிக்கையை அது எந்த வகையில் புரிந்து கொண்டது என்பதையும் தரவுகளைத் தொகுப்பிலிருந்து அதற்கான பதிலையும் அம் முறைமை வெளிப்படுத்துகிறது.

Intelligence : அறிவுக்கூர்மை : நுண்ணறிவு : செயலாக்கும் திறன், ஒவ்வொரு கணினியும் அறிவுக்கூர்மை உடையது.

intelligent : அறிவு நுட்பன்;நுண்ணறிவன் : தன்னுள் இருக்கும் ஒன்று அல்லது மேற்பட்ட செயலிகளினால் (processors) பகுதியாக அல்லது முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் ஒரு கருவி அல்லது ஒரு சாதனத்தின் பண்பியல்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது.

intelligent cable : நுண்ணறிவு வடம் : வெறுமனே ஒரு முனையிலிருந்து அடுத்த முனைக்குத் தரவுகளை அனுப்பும் பணியை மட்டுமின்றி, அது செருகப்பட்டுள்ள இணைப்பியின் பண்பியல்புகளை நிர்ணயம் செய்யும் திறனையும் உள்ளடக்கிய (கம்பி) வடம்.

Intelligent controller : அறிவுமிக்க கட்டுப்பாட்டாளர் : தன்னுடைய இயக்கங்களைக் கட்டுப்படுத்த உள்ளார்ந்த நுண் செயலகத்தைப் பயன்படுத்தும் வெளிப்புறக் கட்டுப்பாட்டு அலகு.