பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/768

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

inteligent terminal

767

interactive cable TV


Intelligent terminal : அறிவார்ந்த முனையம் : உள்ளீட்டு/விெளியீட்டுக் கருவி. அதில் கணினி ஒன்றின் முறைப்படுத்தும் பண்புகள் பொருத்தப்பட்டதாக அல்லது முனையப் பிரிவில் இணைக்கப்பட்டதாக இருக்கின்றன. Point of sale terminal, Local intelligence ஆகியவற்றை பார்க்கவும். Smart terminal என்பதோடு ஒப்பிடவும். Dumb terminal என்பதற்கு எதிரானது.

intelligent terminal intensity : அறிவார்ந்த முனையச் செறிவு.

intelligent transportation infrastructure : நுண்ணறிவு போக்குவரத்து அகக் கட்டமைப்பு : 1996 ஆம் ஆண்டில் அமெரிக்க நாட்டுப் போக்குவரத்துச் செயலர் (அமைச்சர்) ஃபெடரிக்கோ பானா அவர்கள் முன்வைத்த திட்டம். நகர்/புறநகர் நெடுஞ் சாலை மற்றும் திரளான போக்கு வரத்துக் கட்டுப்பாடு/ மேலாண்மை சேவைகளை தானியங்கு மயமாக்கும் திட்டம் இது.

INTELSAT : இன்டெல்சாட் : தகவல் தொடர்பு செயற்கைகோள்களை ஏவிய பன்னாட்டு நிறுவனம். பன்னாட்டுத் தகவல் தொடர்பில் பெரும்பாலான நீண்டதூரத் தொடர்புகள் இவற்றின் மூலமாகவே இயங்குகின்றன.

intensity : திண்ணம் : வரைபட வெளிப்படுத்து கருவியில் வெளிப்படும் ஒளியின் அளவு. கத்தோட் கதிர்க்குழாய் வெளிப்படுத்தும் பிரகாசத்தின் அளவு. இதனை குமிழ் ஒன்றைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம்.

Inter : இடை : எல்லைகளைக் கடத்தல், சான்று Inter work என்றால் ஒரு கட்டமைப்பிலிருந்து வேறு ஒன்றுக்கு என்று பொருள்.

Interactive : இடைப்பரிமாற்ற; ஊட்டாடல் : உள்ளீட்டுக்கு உடனடியாக எதிர் வினை தருதல். பயனாளர் கணினி முறைமையுடன் நேரடியாக தொடர்ந்து தொடர்பு கொள்கிறார். இந்த வழித் தொடர்பில் இயக்குவோர் ஒரு செயல் மூலம் நிரல் தொகுப்பை மாற்றியமைக்கலாம் அல்லது நுழைக்கலாம். முறைமையிடமிருந்து எதிர் தகவல் மற்றும் வழி காட்டுதலுக்காகவும் சரி பார்ப்புக்காகவும் பெறலாம்.

Interactive cable TV : இடைப் பரிமாற்ற கம்பிவட தொலைக்காட்சி 'கேபிள் டி. வி'. : பிரச்சினைகள் குறித்து கருத்துகளைக் கூறி பார்வையாளர்கள் பங்கு பெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சேவை. வீடியோ டெக்ஸ்ட். டெலி டெக்ஸ்ட்