பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/769

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

interactive fiction

768

Interactive processing



போல் அல்லாது முழுதாக தொலைக்காட்சி பார்ப்பதை இது உணர்த்துகிறது. காலப் போக்கில் இந்த சேவைகள் எல்லாம் கேபிள் டி. வி. சேவைகள் மூலம் தர முடியும். டிகோடரும், விசைப்பலகையும் தேவைப்படும்.

interactive fiction : ஊடாடு கதை : ஒருவகை கணினி விளையாட்டு. ஒரு பயனாளர் கணினிக்குச் சில கட்டளைகளைக் கொடுத்து, ஒரு கதையில் தானும் ஒரு கதை மாந்தராகப் பங்கு பெறலாம். பயனாளர் தரும் கட்டளைகள் ஒரளவுக்கு கதையின் நிகழ்வுகளை நிர்ணயிக்க முடியும். பெரும்பாலும் ஒர் இலக்கினை அடைவது கதையின் மையக்கருவாக இருக்கும். அந்த இலக்கை அடைவதற்கான சரியான நடவடிக்கைகளின் வரிசையைக் கண்டறிந்து செயல்படுவதே விளையாட்டின் புதிரான பகுதியாகும்.

Interactive graphics : இடைப் பரிமாற்ற வரைபடங்கள் : வரைபட முறை - இதில் பயனாளரும் கணினியும் தீவிர தகவல் பரிமாற்றத்தில் இருக்கும்.

Interactive graphics system : இடைப் பரிமாற்ற வரைபட முறைமை : கணினி வரைபட முறைமை - இதில் கணினி உதவியுடனான வரைபடத்தைத் தயாரிப்பதில் எல்லா பணி நிலையங்களும் பயன்படுத்தப்படுகின்றன. எல்லாம் இயக்குவோரின் கட்டுப்பாட்டில் உள்ளன. உரைத் தயாரிப்பு, பட்டியல்கள் உருவாக்குதல், வரைபடங்கள், கணினி உதவியுடனான பொறியியல் பணிகள், 35 மி. மீ அசையாத் தகடுகள், அல்லது செயல் படக்கூடிய படங்கள் ஆகியவற்றை உருவாக்கலாம்.

Interactive input : இடைவினை உள்ளீடு.

interactive link : இடைப் பரிமாற்ற இணைப்பு; ஊடாட்டத் தொகுப்பு.

Interactive menu : இடைப் பரிமாற்றப் பட்டியல் : ஒரு நேரத்தில் ஒன்று என்ற அடிப்படையில் கேள்வி கேட்கும் மெனு தத்துவம். ஒரு கேள்விக்கு பதில் வந்தவுடன் இரண்டாவது கேள்வி திரையில் வரும். வணிக தரவு செயலாக்கத்தில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

Interactive processing : இடைப் பரிமாற்ற முறைப்படுத்துதல் : பயனாளருக்கும் கணினிக்கும் இடையே இடையறாத