பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/772

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Interface adapter

771

Interleaf


அல்லது தகவல் தொடர்பு ஊடகமாகவோ இருக்கலாம். இணைப்பி போன்ற பருப்பொருளாகவோ அல்லது மென்பொருளை உள்ளடக்கிய அளவைப் பொருளாகவோ இருக்கலாம்.

Interface adapter : இடைமுக ஏற்பி : கணினி அல்லது முகப்பை ஒரு கட்டமைப்புடன் இணைக்கும் சாதனம்.

Interface card : இடைமுக அட்டை : ஒரு வகையான விரிவாக்க அட்டை. தட்டு இடைமுக அட்டை, தொடர் இடைமுக அட்டை, இணை இடைமுக அட்டை போன்ற வெளிப்புறச் சாதனங்களை கணினிகளில் இணைக்க இது அனுமதிக்கிறது.

Interface Message Processor (IMP) : இடைமுக செய்திச் செயலி.

Interfacial programme : இடைமுகப்புச் செயல்முறை.

Interference : குறிக்கீடு : விரும்பும் சமிக்கைகளின் தரத்தினை சீர்கேடு அடையச் செய்யும் தேவையில்லாத சமிக்கைகள்.

Inter frame coding : இடை உருவ குறியீடமைத்தல் : உருவங்களுக்கிடையிலான வேறுபாடுகளை மட்டும் குறியீடமைக்கும் வீடியோ சுருக்கும் முறை.

Inter graph : இடைப் பரிமாற்ற வரைகலை : கணினி அமைப்புகளில் இருந்த இடைப்பரிமாற்ற வரைகலைகளை உருவாக்கும் அமெரிக்க நிறுவனம்.

Interlace : இடைப்பின்னல் : அணுகு நேரத்தைக் குறைக்கும் வகையில் காந்த வட்டு அல்லது உருளையில் தனித்தனியாக உள்ள சேமிப்பக இருப்பிடங்களில் அடுத்தடுத்த முகவரிகளைக் கொடுப்பது.

interlacing : இடைப்பின்னியல் : குறைவான செங்குத்து ஸ்கேன் விகிதங்களைக் கணினி வெளிப்படுத்தப்படும்போது லிக்கரின் (licker) அளவைக் குறைக்கும் முறை. ஒரே நேரத்தில் அடுத்த இரண்டாவது வரியையும் ஸ்கேன் செய்து இரண்டாவது முறை விட்டுப்போன வரிகளை ஸ்கேன் செய்தல்.

Inter language conversion : மொழிகளுக்கிடையில் மாற்றம் : ஒரு மொழியில் இருந்து வேறொன்றுக்கு மாற்றுதல்

Interleaf : இடைத்தாள் : ஐபிஎம் மின் உயர் பீ. சிக்கள் மற்றும் 386 -களுக்கான முழு அம்சங்கள் உள்ள டி. டீ. பீ. மென்பொருள். உரை மற்றும் வரைகலை தொகுப்பு, தாராள கை ஓவியம் போன்றவற்றை உள்ளடக்கி