பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/773

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

interleaved memory

772

intermediate language



யதற்கு போஸ்ட் ஸ்கிரிப்ட் உதவியும் ஏஸ்/100 ஃபோல்டர்களுடன் இணைப்பும் கிடைக்கிறது.

interleaved memory : இடைப் பின்னல் நினைவகம் : கணினியின் நிலையா நினைவகத்தில் (RAM) காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் பொருட்டு முகவரிகளை ஒழுங்கமைக்கின்ற ஒரு வழிமுறை. இடைப் பின்னல் நினைவகத்தில், அடுத் தடுத்த நினைவக இருப்பிடங்கள் சில்லுவின் வேறுவேறு இடைவரிசைகளில் இருப்பதுண்டு. மையச் செயலியானது ஒரு பைட்டை அணுகியபின், அடுத்த பைட்டை அணுகுவதற்கு முன்பாக, ஒரு முழு நினைவகச் சுழற்சி முடியும்வரை காத்திருக்க வேண்டிய தில்லை.

Interleaving : இடைவிடல் : பல் நிரல் தொடரமைக்கும் தொழில் நுட்பம். ஒரு நிரல் தொடரின் பகுதிகள் வேறொரு நிரலாக்கத் தொடரில் அமைத்து அதை வேறொரு நிரல் தொடரில் அமைப்பதுண்டு. இம்முறையில் நிரலாக்கத் தொடர்களில் ஒன்றில் செயலாக்க தாமதம் ஏற்பட்டால் வேறொரு நிரல் தொடரின் பகுதிகள் செயலாக்கம் செய்யப்படலாம்.

Interlink : தொடுப்புறவு; தொடுப்பிணைப்பு

Interlock : இடைப்பூட்டி : ஒரு சாதனம் அல்லது இயக்கம் வேறொன்றில் தலையிடா வண்ணம் பாதுகாக்கும் வசதி. கணிப்பொறியில் நிரல் தொடர் ஒன்று செயல்படுத்தப்பட்டு வரும்போது அதை நகர்த்து வதைத் தடைசெய்யும் முறையில் கட்டுப்பாடு முகப்பில் உள்ள பொத்தான்கள் பூட்டிக் கொள் வது ஒரு குறுக்கீடு எனலாம்.

Interlude : இடைச்செயல் : ஆரம்பப் பராமரிப்பு.

intermediate code generator : இடை நிலைக் குறிமுறை உருவாக்கி.

Intermediate mode routing : இடைமுறை வழியமைப்பு : பக்கத்தில் அல்லாத முனைகளுக்கு ஒரு செய்தியை அனுப்புதல். சான்றாக, அ - ஆ - இ என்ற மூன்று கணினிகளுக்கு இணைப்பு இருக்குமானால் 'அ' கணினியிலிருந்து 'இ' கணினிக்கு 'ஆ' கணினி மூலம் செய்தி அனுப்ப முடியும்.

intermediate language (IL) : இடைநிலை மொழி : பொதுவாக, ஒரு கணினி மொழி உயர் நிலை மொழியாகவும், செயல் படுத்த வேண்டிய இலக்கு