பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/774

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

intermediate tool

773

Internal documentation


மொழி எந்திர மொழியாகவும் இருப்பதுண்டு. அதாவது, மொழி மாற்றிகள் (compilers) பெரும்பாலும் உயர்நிலைக் கணினி மொழி நிரல்களை எந்திர மொழிக்கு மாற்றியமைக்கின்றன. ஒருசில உயர் நிலை மொழி மாற்றிகள் முதலில் அசெம்பிளி மொழிக்கு மாற்றிப் பின் எந்திரமொழிக்கு மாற்று கின்றன. இதில் அசெம்பிளி மொழி இடைநிலை மொழியாகப் பயன்படுகிறது.

intermediate tool : இடைநிலைக் கருவி.

intermittent : விட்டு விட்டு : தகவல் சமிக்கை அல்லது தொலைபேசி இணைப்பு தொடர்ந்து கிடைக்காமலும் அதேவேளையில் துண்டிக்கப் படாமலும் குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் விட்டு விட்டுச் செயல்படுதல்.

Intermittent error : இடையிடையே வரும் பிழை : இடையிடையே அடிக்கடி வரும் பிழைகள். இதனால் பிழை திருத்தலும் மீண்டும் அதை உருவாக்குதலும் சிக்கலாகிறது.

internal and external : அகம்-புறம்.

Internal clock : உள்ளார்ந்த கடிகாரம் : அன்றாடம் நேரத்தைக் காட்ட கணினியின் உள்ளே அமைக்கப்படும் மின்னணு மின்சுற்று.

Internal command : உள்ளார்ந்த கட்டளை;அக ஆணை : எம்எஸ் டாசில் பொது கட்டளை செயலகத்தின் வழியான கட்டளை (command. Com.) ஒன்று உள்ளது. இதற்காக எந்தக் கோப்பையும் ஏற்ற வேண்டியதில்லை.

Internal data representation : உள்ளே இருக்கும் தரவு : கணினியின் உள்ளே அமைந்திருக்கும் பதிவுகள் சேமிப்பகம் மற்றும் பிற சாதனங்களில் உள்ள தரவுகள்.

Internal document : அகநிலை ஆவணம்.

Internal documentation : உள்விவர ஆவணம்;அக ஆவணம் : 1. மூல மொழி நிரலாக்கத் தொடரில் விளக்கக் குறிப்புகள், குறிப்புரைகளைச் சேர்த்தல். இதற்கு கணினி மூலம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. நிர லாக்கத் தொடரின் பல்வேறு பகுதிகள் செய்யும் பணிகள் பற்றி தற்போதைய மற்றும் எதிர்கால நிரலாக்கத் தொடர் அமைப்பவர்களுக்கு இது உணர்த்துகிறது. 2. ஒரு வணிக நிறுவனத்தில் பயன்படுத்தப் படும் ஆவணப்படுத்தல்.