பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/778

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Internet access device

777

Internet backbone



Internet access device : இணைய அணுகல் சாதனம் : இணையத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும், சமிக்கைகளை திசைப்படுத்தவும், இணைப்பு நேரத்தின்படி கட்டணம் கணக்கிடவும் பயன்படும் கருவி. ஒன்றுக்கு மேற்பட்ட தொலைதூரப் பயனாளர்கள் ஒரே நேரத்தில் இணையத்தை அணுக வழி செய்யும்.

Internet account : இணையக் கணக்கு : பயனாளர் ஒருவர் இணைய இணைப்புக்காக இணையச் சேவையாளரிடம் பதிவு செய்து கொள்ளல். அவர்கள் தரும் பயனாளர் பெயர் (username), நுழைசொல் (password) மூலமாக இணையத்தை அணுக முடியும். பீடீபீ (Point To Point) மூலம் இணைய அணுகல், மின்னஞ்சல் போன்ற சேவைகள் கிடைக்கும்.

Internet address : இணைய முகவரி : இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு செய்திகளை முகவரியிடுவதற்கான படிவம்.

Internet Architecture Board : இணையக் கட்டுமானக் கழகம் : ஐசாக் (ISOC) எனப்படும் இணையச் சமூக அமைப்பின் (Internet Society) ஒரு குழு. இணையத்தின் ஒட்டுமொத்தக் கட்டுமான நோக்கங்களுக்கு பொறுப்பாக விளங்குகிறது. தர வரையறை செயலாக்கங்களில் ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து வைக்கும் பணியையும் செய்கிறது. தலைப்பெழுத்துக் குறும்பெயர் ஐஏபி (IAB).

Internet backbone : இணைய முதுகெலும்பு : இணையம் என்பது பிணையங்களின் பிணையம் (Network of Networks). ஒரு நாட்டிலுள்ள உள்ளுர் மற்றும் வட்டாரப் பிணையங்களை ஒருங்கிணைத்து இணையத்தில் பிணைக்கப்பட்டுள்ள இன்னொரு முதுகெலும்புப் பிணையத்துடன் தரவுகளைப் பரிமாறிக் கொள்ளும் அதிவேகப் பிணையம். வரலாற்றுப் போக்கில் பார்த்தால், இணையத்தின் முன்னோடியான என்எஸ்எஃப்நெட் (NSFNet) அமெரிக்க நாட்டின் முதுகெலும்புப் பிணையமாகத்திகழ்ந்தது. தேசிய அறிவியல் கழகம் (National Science Foundation) நடத்திவந்த அனைத்து மீத்திறன் கணினி மையங்களும் (Super Computer Centers) இந்த முதுகெலும்புப் பிணையத்தில் இணைக்கப்பட்டிருந்தன. இன்றைக்கு பல்வேறு தனியார் நிறுவனங்களும் தத்தமது முதுகெலும்புப் பிணையங்களை