பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

anthropomorphism

77

antistatic mat


anthropomorphism : மனிதப் பண்பேற்றல் : கணினிகள் மற்றும் கணினிகளால் கட்டுப்படுத்தப்படும் விசைக் கருவிகளைக் குறிப்பதற்கான உருவக முறை. இதில் அவை மனிதர்கள் போன்று கருதப்படுகின்றன.

anti-aliasing : மாற்று நீக்கி : திரையில் காட்டும் வடிவம்

மாற்று நீக்கி

ஒன்றின் விளிம்புகளும் கோடுகளும் பிசிரற்றதாக தோன்றக் கையாளப்படும் வடிகட்டும் உத்தி.

anticedent driver reasoning : முன்னிகழ்வு ஏதுவாதம்.

anticipatory paging : எதிர் பார்ப்பு பக்கமாக்கல்.

antidote : முறிப்பி.

anti-glare : கூசொளித் தடுப்பு : கணினித் திரையில் வெளியிலிருந்து வரும் வெளிச்சம்பட்டுப் பிரதிபளிப்பதைக் குறைக்கும் நடவடிக்கை. பிரதி பலிப்பைக் குறைக்கும் வேதியல் பொருளை கணினித் திரையில் பூசுதல், கூசொளியைத் தடுக்கும் ஒரு சல்லடைத் திரையை கணினித் திரையின்மேல் இடல் அல்லது வெறுமனே வெளி வெளிச்சம் பயனாளர் கண்களுக்கு நேராகப் பிரதிபலிக்காத வகையில் கணினித் திரையை குறிப்பிட்ட திசையில் திருப்பி வைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் கூசொளியைத் தடுக்கலாம்.

antiglare filter : கூசொளி வடிக்கட்டி.

antistatic device : நிலை மின்சாரத் தடுப்புச் சாதனம் : கணினிச் சாதனங்கள் பழுதுபட்டுப் போகவும் தரவு இழப்பு ஏற்படவும் காரணமான, நிலைமின்சார அதிர்வுகளைக் குறைக்கப் பயன்படும் சாதனம். இது நிலை மின்சாரத்தைத் தடுக்கும் தரைவிரிப்பாக இருக்கலாம். கணினியோடு இணைத்து மணிக்கட்டில் கட்டப்படும் ஒயராக இருக்கலாம். அல்லது நிலை மின்சாரத்தைத் தடுக்கும் தைலத்தைப் பூசிக்கொள்வதாய் இருக்கலாம்.

antistatic mat : நிலை மின்சார எதிர்ப்புப் பாய் : நிலை மின்சாரத்தினால் ஏற்படும் அதிர்ச்சிகளைத் தடுக்க ஒரு சாதனத்தின் முன்