பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/781

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Internet nodes

780

Internet security



வலை ஆவணங்களை (www documents) இணையத்தில் வினியோகம் செய்யும். பல்வேறு பாதுகாப்புச் செயல்கூறுகளை உள்ளடக்கியது. வலைப் பக்கங்களில் சிஜிஐ நிரல்களை அனுமதிக்கிறது. கோஃபர் (Gopher) மற்றும் எஃப்டீபீ வழங்கன்களை (FTP Servers) ஏற்கிறது.

Internet nodes : இணையக் கணுக்கள்.

Internet options : இணைய விருப்பத் தேர்வுகள்.

Internet phone : இணைய பேசி.

Internet protocol : இணைய நெறிமுறை.

Internet Relay Chat : இணைய அரட்டை அரங்கம்.

Internet Research Steering Group : இணைய ஆய்வு வழி காட்டுங் குழு : இணைய ஆய்வு முனைப்புக் குழுவினை (Internet Research Task Force - IRTF) நிர்வகிக்கும் அமைப்பு.

Internet Research Task Force : இணைய ஆய்வு முனைப்புக் குழு : இணையக் கட்டுமானக் கழகத்துக்கு (IAB) இணையம் தொடர்பான நீண்ட காலப் பரிந்துரைகளை முன்வைக்கும் தன் முனைப்பு அமைப்பு.

Internet router : இணைய வழிப்படுத்தி : ஆப்பிள் நிறுவனத்தின் மெக்கின்டோஷ் மென் பொருள். இதன்மூலம் இன்டர் நெட் இயக்கங்களை உள்ளுர் பேச்சு, ஈதர் பேச்சு, அடையாளப் பேச்சு ஆகிய எதனுடனும் இணைத்து எந்த இணைய நிலையத்துடனும் இணைத்துத் தர முடியும். ஒவ்வொரு மீட்டரும் 8 இணையங்களுடன் இணைக்க முடியும். அதிக பட்ச மாக 1. 6 கோடி முனைகளிலும் 1, 024 இணையங்களுடனும் சேரும்.

Internet security : இணையப் பாதுகாப்பு : இணையத் தரவு பரிமாற்றத்தில் தரவு சான்றுறுதி, அந்தரங்கம், நம்பகத்தன்மை, சரிபார்ப்பு இவையனைத்தையும் உள்ளடக்கிய ஒரு கருத்துரு. (எ-டு) வைய விரிவலையில் (www) உலாவி (Browser) மூலமாக பற்று அட்டையைப் (Credit Card) பயன்படுத்தி ஒரு பொருளை வாங்குவதில் பல்வேறு பாது காப்புச் சிக்கல்கள் அடங்கியுள்ளன. முதலாவதாக இணையம் வழியாக அனுப்பப்படும் பற்று அட்டையின் எண்ணை அத்துமீறிகள் எவரும் குறுக்கிட்டு அறிந்து கொள்ளக்கூடாது. அவ்வெண் பதிந்து