பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/784

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Internist

783

Interpretation



நிறுவனங்கள் பங்கு கொண்ட கூட்டமைப்பாக இன்டர்நிக் 1993ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இன்டர்நிக்கின் மின்னஞ்சல் முகவரி info@internic. net இணைய தளம் : http : //www. internic. net

Internist : இன்டர்நிஸ்ட் : 1970களின் ஆரம்பத்தில் பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் மையர்ஸ் மற்றும் ஹாரி பீப்பிள் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

Interoperable : இசைவு இயங்க தன்மை : வேறொரு கணினி அமைப்புடன் சரிவர இயங்கக் கூடிய ஒரு அமைப்பின் திறன்.

interplanetory internet : கோள்களுக்கிடையிலான இணையம்.

interpolate : இடைமதிப்பீடு; இடைக் கணிப்பு : ஒரு வரிசையான மதிப்புகளில் தெரிந்த இரண்டு மதிப்புகளுக்கு இடைப்பட்ட மதிப்பினைக் கணக்கிடல்.

Interpolation : இடைச் செருகல்; இடைக் கணிப்பு : இரண்டு தெரிந்த மதிப்புகளுக்கிடையிலான மதிப்பினைக் காணும்முறை. கணினி வரைகலையில் இந்தச் செயல்முறையை அடிக்கடி பயன்படுத்தி இரண்டு நேர்கோடுகளை இணைத்து வளைவுகளையோ அல்லது இரண்டு குறிப்பிட்ட புள்ளிகளுக்கிடையில் மென்மையான வளைவுகளையோ வரையறுப்பது.

Interpress : இன்டர்பிரஸ் : ஜெராக்ஸ் நிறுவனத்தின் பக்க விளக்க மொழி. 2, 700 மற்றும் 9, 700 பக்க அச்சுப் பொறிகளில் பயன்படுத்தப்படுகிறது. வென்ச்சுரா பதிப்பகம் இன்டர் பிரசுக்கான வெளியீடுகளை அளிக்கிறது.

interpret : ஆணைமாற்று : 1. கணினிக்கான ஒரு கூற்றை அல்லது ஒர் நிரலை பொறி மொழி வடிவில் மாற்றி அதனைச் செயல்படுத்துதல். 2. ஒரு கணினி மொழியில் எழுதப்பட்ட ஒரு நிரலை, ஒவ்வொரு கூற்றாக பொறி மொழியில் மொழி பெயர்த்து அதனை நிறைவேற்றுவது. ஒட்டு மொத்த நிரலையும் பொறி மொழிக்கு மாற்றம் செய்து, பிறகு தனியாக பொறி மொழி நிரலை இயக்கிக் கொள்ளும் மொழிமாற்று (Compile) முறைக்கு மாற்றானது.

Interpretation : ஆணை மாற்றம்; விளக்கம் : உயர்நிலை மொழி நிரல் தொடர் வாக்கியங்களை எந்திரமொழி நிரல்களாக மாற்றும் மொழி பெயர்ப்பு. ஒரு