பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/785

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Interpretered language

784

interrupt



நிரல் தொடருக்கு விளக்கம் அளிக்கும்போது, ஒவ்வொரு வாக்கியத்தினையும் மொழி பெயர்த்து அடுத்த வாக்கியத்தைச் செயலாக்கம் செய்வதற்கு முன் செயல்படுத்தப்படும்.

interpreted language : ஆணை மாற்று மொழி : எழுதப்பட்ட நிரலை ஒவ்வோர் ஆணையாக பொறி மொழிக்கு மொழி பெயர்த்து உடனுக்குடன் இயக்கும் முறை கொண்ட கணினி மொழி. பேசிக், லிஸ்ப், ஏடிஎல் ஆகிய மொழிகள் பொதுவாக ஆணை மாற்று மொழிகள் எனப்படுகின்றன. ஆனாலும், பேசிக் மொழி நிரலை பொறி மொழிக்கு ஒட்டுமொத்தமாக மொழிபெயர்த்து இயக்கும் மொழி மாற்றிகளும் (Compiler) உள்ளன.

Interpreter : வரி மொழி மாற்றி; ஆணை மாற்றி : மூல மொழியில் உள்ள ஒவ்வொரு வாக்கியத்தையும் தொடர் எந்திர நிரல்களாக மாற்றி அவற்றை இயக்கும் கணினி நிரலாக்கத் தொடர்.

interprocess communication : பணிகளிடை தகவல் தொடர்பு : ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை நிறைவேற்ற வல்ல கணினி முறைமைகளில் இரண்டு பணிகளுக்கிடையே அல்லது செயலாக்கங்களுக்கிடையே தகவல் தொடர்பை நிகழ்த்தும் முறை. குழாய் (pipes), estysgb (5ố (semaphores), பகிர்வு நினைவகம், சாரைகள் (Queues), சமிக்கைகள் மற்றும் அஞ்சல்பெட்டி எனப் பல்வேறு முறைகளில் இந்தத் தகவல் பரிமாற்றம் நடை பெறுகிறது.

Inter Record Gap (IRG) : பதிவேடு இடையில் உள்ள இடை வெளி : நாடாவில் தரவுகளின் தொகுதிகளுக்கிடையில் உருவாக்கப்பட்ட இடைவெளி. சுருணையினை ஆரம்பித்தல் மற்றும் நிறுத்துதலின் மூலம் உருவாக்கப்படுகிறது. IᏒᏀ என்று சுருக்கி அழைக்கப்படுகிறது.

interrogate : கேள்வி கேட்டல் : (1) ஒரு கோப்பில் உள்ள பதிவேடுகளைத் தேடுதல், தொகுத்தல் மற்றும் எண்ணுதல். (2) ஒரு முகப்பு அல்லது கணினி அமைப்புத் தகுதியை அல்லது நிலையைச் சோதித்தல்.

Interrupt : குறுக்கீடு; இடையீடு : வழக்கமான நிரல் தொடர் செயல்படுவதை நிறுத்தி உள்சேமிப்பகத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு வன்பொருளின் நிரல் தொடர் கட்டுப்