பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/788

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Intra

787

invalid



Intra : அக இயக்கம் : ஒரு எல்லைக்குள் சான்றாக Intra office என்பது ஒரு அலுவலகத்துக்குள்ளேயே நடைபெறும் இயக்கங்கள்.

Intranet : உள் இணையம் : இணையத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் ஒரு நிறுவனப் பிணையம் .

Intraware : அக இணைய மென் பொருள் : ஒரு குழுமத்தின் அக இணையத்தில் (Intranet) பயன்படுத்தப்படும் குழு மென் பொருள்/இடை மென்பொருள் ஆகியவை இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் மின்னஞ்சல், தரவுத் தளம், பணிப்பாய்வு, மற்றும் உலாவிப் பயன்பாட்டுத் தொகுப்புகளை உள்ளடக்கியவை.

intrinsic font : உள்ளுறை எழுத்துரு : பெரிதாக்கல் சிறிதாக்கல் எதுவுமின்றி அப்படியே ஒரு பிட் படிமமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உருவளவும், வடிவமைப்பும் அமைந்த ஒர் எழுத்துரு.

intruder : அத்துமீறி : ஒரு கணினியில் அல்லது ஒரு கணினிப் பிணையத்தில் பொதுவாகத் தீங்கெண்ணத்துடன் அனுமதியின்றி நுழைகின்ற ஒரு பயனாளர் அல்லது அத்துமீறி நுழைகின்ற ஒரு நிரல்.

Intuitive command : உள்ளுணர்வுக் கட்டளை : ஒரு கட்டளையின் வெளியீடாக வருவதைக் குறிக்கக்கூடிய பெயருடைய கட்டளை. சான்றாக, ஒரு கோப்பை சேமிப்பதற்கு Control - S என்பது ஒரு உள்ளுணர்வுக் கட்டளை. எப்படியென்றால் இக்கட்டளையின் முடிவு 'S' என்னும் எழுத்துடன் ஆரம்பிக்கும். Control - X என்பது ஒரு பயன்பாட்டிலிருந்து வெளியேறுவது.

. in. us : இன். யுஎஸ் : இணையத்தில் ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் இண்டியானா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

invalid : செல்லாத பிழையான; தவறான பொருந்தாத : 1. கணினியில் உள்ளீடு செய்யப்படுகின்ற ஏற்றுக் கொள்ளவியலாத மதிப்பு. (எ-டு) எண்வகை மதிப்புக்குப் பதிலாக எழுத்துவகை மதிப்பை உள்ளீடு செய்தல். 2. ஒரு நிரலில் தவறான தருக்க முறையில் எழுதப் பட்ட பிழையான கட்டளை. விடையும் பிழையானதாக இருக்கும்.