பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

antivirus programme

78

API


னால் வைக்கப்படும் தரைப் பாய். மனிதர்கள் மின்காந்த கருவிகளை கையாளும்போது ஏற்படும் அதிர்ச்சியால் தரவுகள் அழிந்து போகாமல் இது காப்பாற்றும்.

antivirus programme : நிச்சு நிரல் எதிர்ப்புச் செயல்நிரல்; நச்சு நிரல் எதிர்ப்பி : ஒரு கணினியின் சேமிப்பு வட்டிலும் நினைவகத்திலும் தங்கியிருந்து ஊறு விளைவிக்கும் நிரல் தொகுப்பை வைரஸ் அல்லது நச்சுநிரல் என்கிறோம். அத்தகைய நச்சுநிரல் நமது கணினியின் சேமிப் பகத்திலோ நினைவகத்திலோ உள்ளதா என்பதைக் கண்டறியவும், இருப்பின் அதனைக்களையவும் திறனுள்ள நிரல் தொகுப்பை நச்சுநிரல் எதிர்ப்பி என்கிறோம். பிணையம் (network) அல்லது இணையம் (internet) வழியாக பதிவிறக்கம் (download) செய்யும் கோப்புகளில் நச்சுநிரல் ஒட்டிக் கொண்டு உள்ளதா என்பதை அறிந்து சொல்கின்ற எதிர்ப்பிகளும் உள்ளன.

antonym dictionary : எதிர்சொல் அகராதி :

any key : ஏதேனும் ஒரு விசை : கணினி விசைப் பலகையிலுள்ள ஏதேனும் ஒரு விசை. கணினியில் இயக்கப்படும் செயல்முறைத் தொகுப்புகள் சில, சிலவேளைகளில் தொடர்ந்து செல்ல, ஏதேனும் ஒரு விசையை அழுத்தவும் (Press any key to continue) என்ற செய்தியைத் தருவதுண்டு. அப்போது பயனாளர் விசைப் பலகையிலுள்ள ஏதேனும் ஒரு விசையை அழுத்தலாம். விசைப் பலகையில் any என்ற பெயரில் ஒரு விசை இல்லை என்பதை அறிக.

any-to-any connectivity : எதிலிருந்து எதற்கும் இணைப்பு : பிணையங்களில் (network) பல்வகை உள்ளன. பிணையக் கட்டமைப்பிலும் (topology), புரவலர் வழங்கன் (hostlserver) இனத்திலும், தரவுப் பரிமாற்ற நெறிமுறையிலும் (protocol) பல்வேறு வகைகளும் முறைகளும் உள்ளன. பல்வகைச் சூழலும் ஒருங்கிணைந்த ஒரு பிணையக் கட்டமைப்பில் தரவுவைப் பகிர்ந்து கொள்ள முடியுமெனில் அதனை எதிலிருந்து எதற்குமான (any to any) இணைப்பு என்கிறோம்.

aperture card : துளை அட்டை : நுண் படச்சுருள் பொருத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட திறப்புள்ள, துளை அட்டை.

API : ஏபிஐ : பயன்பாட்டு நிரல் இடைமுகம் என்று பொருள்படும் Applications Programming Interface என்பதன் சுருக்கம்.