பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/790

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

inverted - list database

789

Invoke


 தரவுத் தளம். ஆனால் பல வேறுபாடுகளைக் கொண்டது. தரவுத் தள மேலாண்மை சற்றே கடினமானது. ஒரு உறவுமுறைத் தரவுத் தளத்தைக் காட்டிலும் இதில் தரவுகளின் ஒத்திசைவு, ஒருங்கமைவு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைச் செயல் படுத்துவது கடினம். தலைகீழ்ப் பட்டியல் அட்டவணையில் இடை வரிசைகள் (அல்லது ஏடுகள்) ஒரு குறிப்பிட்ட வரிசையில் அடுக்கப்பட்டிருக்கும் வரிசையாக்கங்களின் மூலம் எவ்வித வரிசைமுறை ஆக்கப்பட்டிருப்பினும் இது மாறாது. இரு அட்டவணைகளுக்கிடையே சுமத்தப்படும் தருக்க முறை இணைப்பு, நிபந்தனை அடிப்படையிலும் தரவுத் தளத்தை வரிசைப்படுத்தலாம். எந்தப் புலத்தையும் எத்தனை புலங்களையும் தேடு புலமாகக் கொள்ளலாம். தேடு புலம் தனித்தோ பல சேர்ந்தோ இருக்கலாம். போலிகை (Duplicate) ஏடுகள் இருக்கக்கூடாது, உறவுடைய இரு அட்டவணைகளுக்கு இடையேயான ஒருங்கிணைவு (Integrity) கட்டாயம் என்கிற கட்டுப்பாடுகள் இல்லை. அட்டவணைகளோ, வரிசையாக்கக் கோப்புகளோ பயனாளருக்குப் புரியாது.

Inverted structure : தலைகீழாக்கிய அமைப்பு : முன் குறிப்பிடப்படாத தரவுவை தானாக வேகமாகத் தேட அனுமதிக்கும் கோப்பின் வடிவமைப்பு. குறிப்பிட்ட புலத்தில் மதிப்புகளின்படி பதிவு விசைகளை அணுகக்கூடிய வகையில் பராமரிக்கப்படும் சுயேச்சைப் பட்டியல்கள்.

Inverter : தலைகீழாக்கி : ஒரு இருமை 1 உள்ளிட்டிலிருந்து இருமை 0 வெளியீட்டையோ அல்லது தலைகீழாகவோ செய்யும் மின் சுற்று.

Inverting circuit : தலைகீழாக்கும் மின்சுற்று : நேர் மின் சாரத்தை மாற்று மின்சாரத்தில் மின்சுற்றை மாற்றுதல். Adapterக்கு எதிர்ச்சொல்.

invert selection : ஏனையவற்றை தேர்வு செய்.

Invisible refresh : புலனாகாத, புதுப்பிப்பு : இயங்கும் நினைவகங்களைக் கணினியின் மற்ற பகுதிகள் தலையிடாமல் புதுப்பிக்கும் திட்டம்.

invoice : விலைப்பட்டி.

invoke : எழுப்புதல்; விளித்தல் : ஒரு நிரலாக்கத் தொடர், வழமை, பணி அல்லது செயலாக்கத்தை இயக்கச் செய்தல்.