பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/793

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IP address

792

IPL-V



தலைப்பெழுத்துக் குறும்பெயர். டீசிபி/ஐபி நெறிமுறையின் ஒர் அங்கமாக இருந்து செயல்படுவது. தரவு/செய்திகளை பொதிகளாகப் பிரித்து அனுப்பும் பணியையும் மறுமுனையில் பொதிகளை ஒருங்கிணைத்து மீண்டும் மூலத் தகவலைக் கொணரும் பணியையும் செய்கிறது. ஐஎஸ்ஓ/ ஒஎஸ்ஐ மாதிரியத்தில் அடுக்கில் பிணைய அடுக்கில் (Network Layer) இது செயல்படுகிறது.

IP address : ஐபீ முகவரி : இன்டர்நெட்டில் ஒரு குறிப்பிட்ட கணினியை அடையாளம் காட்டும் எண்முறை முகவரி. இதில் நான்கு எண்கள் உள்ளன. தொலைபேசி எண்களைக் கொண்டு தொலைபேசி அழைப்புகளை நெறிப்படுத்துவது போல, ஐ. பீ. முகவரியைப் பயன்படுத்தி இணையச் செய்திகளை ஒழுங்குபடுத்து கின்றார்கள்.

IPC : ஐபீசி : Internet Process Communication என்பதன் சுருக்கம். ஒரே கண்ணிக்குள்ளேயோ அல்லது ஒரு கட்டமைப்புக்குள்ளேயோ ஒரு நிரலாக்கத் தொடரிலிருந்து இன்னொன்றுக்கு தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுதல். வேண்டுகோளுக்குப் பதில் பெறும் வகையில்" உறுதியளிக்கப்படுகிறது. "க்ளிப் போர்டை"ப் பயன்படுத்தி ஒரு கோப்பிலிருந்து வேறொன்றுக்கு தரவுகளை வெட்டி ஒட்ட வும் இதன் மூலம் முடியும்.

IPCS : ஐபீசிஎஸ் : Industrial Process Computer System என்பதன் குறும்பெயர். மும்பையில் உள்ள டைனலோக் மைக்ரோ சிஸ்டம் நிறுவனம் உருவாக்கியது.

IPDS : ஐபீடிஎஸ் : Intelligent Printer Data System என்பதன் குறும்பெயர். செய்தி அல்லது வரைகலைகளை முழுப் பக்க அளவில் பெருமுக அல்லது சிறு கணினியிலிருந்து லேசர் அச்சுப்பொறிக்கு அனுப்புவதற்கான ஐபிஎம் மின் படிவம்.

IPI : ஐபீஐ : Intelligent Peripheral Interface என்பதன் குறும்பெயர். சிறு மற்றும் பெருமுகக் கணினிகளுடன் பயன்படுத்தப்படும் அதிவேக நிலைவட்டு இடைமுகம். ஒரு நொடிக்கு 10 முதல் 25 மீமிகு எட்டியல்கள் (மெகா பைட்டுகள்) அளவில் தரவுகளை மாற்றி அனுப்புவது, ஐபிஐ-2 ஐபிஐ-3 என்பன அவை செயல்படுத்தும் கட்டளைகளில் உள்ள வேறுபாடுகளைக் குறிப்பன.

IPL-V : ஐபீஎல்-V : Information Processing Language V என்பதன்