பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/796

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IRM

795

IRQ conflict



நடப்பு (Virtual Reality) இவற்றுக்கு மாற்றாகப் பொருள் உணர்த்த குறிப்பிடும் சொல்.

IRM : ஐஆர்எம் : Information Resource Manager என்பதன் குறும்பெயர். ஒரு நிறுவனத்தின் தலைமை கணினியை இயக்குவதற்குப் பொறுப்பேற்று அதைப் பயன்படுத்தும் ஊழியர்களைக் கண்காணித்து வரும் நபர்.

Iron oxide : இரும்பு/ஆக்சைடு : காந்த நாடாக்கள் மற்றும் குறைதிறன் வட்டுகளின் மேற்பரப்பில் பூசுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருள்.

IRQ : ஐஆர்கியூ : குறிக்கீட்டுக் கோரிக்கை என்று பொருள்படும் Interrupt Request என்ற தொடரின் சுருக்கம். வின்டெல் (விண்டோஸ் இன்டெல்) கணினிகளில் இயலக் கூடிய வன்பொருள் குறுக்கீடுகளின் (Hardware Interrupts) தொகுதியில் ஒன்றை ஒர் எண்ணால் அடையாளம் காணும் முறை. எந்தக் குறுக்கீட்டு கையாளியைப் (Interupt Handler) பயன்படுத்த வேண்டும் என்பதை ஐஆர்கியூ எண் உணர்த்துகிறது. ஏடீ பாட்டை (AT bus). ஐஎஸ்ஏ மற்றும் இஐஎஸ்ஏ-களில் 15 ஐஆர்கியூக்கள் உள்ளன. நுண்தடக் கட்டுமானத்தில் (Micro Channel Architecture) 255 ஐஆர்கியூக்கள் உள்ளன. ஒவ்வொரு சாதனத்துக்கான ஐஆர்கியூ இணைப்புக் கம்பி அல்லது டிப் நிலைமாற்றி (DIP Switch) களில், நிலையாகப் பிணைக்கப் பட்டிருக்கும். விஎல் பாட்டை (VL Bus) மற்றும் பீசிஐ உள்ளக பாட்டை (PCI Local Bus) ஆகியவை அவற்றுக்கே உரிய குறுக்கீட்டு முறைமைகளைக் கொண்டுள்ளன. குறுக்கீடுகள் குறுக்கீட்டு எண்களாக மாற்றப்படுகின்றன.

IRQ conflict : ஐஆர்கியூ முரண்; ஐஆர்கியூ மோதல் : வின்டெல் (Wintel) கணினிகளில் இருவேறு புறச் சாதனங்கள் ஒரே ஐஆர்கியூ மூலமாக மையச் செயலகத்தின் சேவையைக் கோருவதனால் உருவாகும் நிலைமை. ஐஆர் கியூ முரண், கணினியின் சீரான செயல்பாட்டைத் தடுக்கின்றது. (எ-டு) ஒரு கணினியில் நேரியல் துறை (Serial Port) யில்; இணைக்கப்பட்ட சுட்டி (Mouse) மையச் செயலகத்துக்கு ஒரு குறுக்கீட்டை அனுப்புகிறது. ஆனால் அதே குறுக்கீட்டு எண் இணக்கி (modem) அனுப்பும் குறுக்கீட்டைக் கையாளும் நிரலைச் சுட்டுகிறது எனில்