பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/800

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ISR

799

ITI



பகுதியில் மட்டுமே இணையச் சேவை வழங்குவதுண்டு. இன்னும் சில சேவை நிறுவனங்கள் பல்வேறு நகரங்கள் மற்றும் நாடுகளில் சேவை வழங்குகின்றன.

ISR : ஐஎஸ்ஆர் : Information storage and retrieval என்பதன் குறும்பெயர்.

IT : தகவல் தொழில்நுட்பம் : Information Technology குறுக்கம்.

. it : . ஐடீ : ஒர் இணைய தளம் இத்தாலி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவு களப்பெயர்.

Italic : சாய்வெழுத்து : சாய்வான எழுத்துகளைக் கொண்ட ஒரு எழுத்தச்சு அமைப்பு.

item : உருப்படி.

Iterate : திரும்பச் செய்; பன்முறை செய் : நிரலாக்கத்தொடர் கட்டுப்பாட்டில் தானியங்கியாக திரும்பச் செய்தல். ஒரு முடிவு செய்யப்பட்ட நிறுத்தம் அல்லது பிரிவு நிலை வரும்வரை அதே முறையில் செயலாக்க நிலைகளைச் செய்தல்.

iteration : பன்முறை செய்தல்; திரும்பச் செய்தல்.

iterative : பன்முறை செய்தல் : திரும்ப வருதல். விரும்பும் முடிவுக்கு நெருங்கி வரும் நடைமுறைக்காக அடுத்து வரும் வலியுறுத்தம் அல்லது திரும்ப வரும் சமயத்தில் பயன்படும்.

Iterative operation : திரும்ப வரும் இயக்கம் : ஆணைகள் அல்லது செயல் முறைகளை அடுத்தடுத்து செய்ய வேண்டி வரும் இயக்கம்.

iterative statement : மடக்குக் கூற்று, மடக்குக் கட்டளை : ஒரு நிரலில், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்டளைகளை மீண்டும் மீண்டும் நிறை வேற்றச் செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு கூற்று அல்லது கட்டளை அமைப்பு.

எடுத்துக்காட்டு : பேசிக் மொழி :

     FOR I=1 TO 10
            PRINT "Welcome"
     ΝΕΧΤ I

சி-மொழி :

    while (n>0)
   {
        printf ("%d", n) ;
        n - - ,
    }

ITI : ஐடிஐ : நுண்ணறிவு போக்குவரத்து அகக்கட்டமைப்பு என்று பொருள்