பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/801

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

I-time

800

IZE



படும் Intelligent Transportation Infrastructure என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

I-time : அ-நேரம் : அறிவுறுத்தல் நேரம் என்று பொருள்படும் Instruction Time என்பதன் சுருக்கம்.

ITR : ஐடீஆர் : இணையப் பேச்சு வானொலி என்று பொருள்படும் internet Talk Radio என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

ITU : ஐடீயு : பன்னாட்டுத் தொலைத் தொடர்புச் சங்கம் என்று பொருள்படும் International Telecommunication Union என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

ivue : ஐவ்யூ : ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு படிமக் கோப்பு வடிவாக்கம். ஒரு படத்தை எவ்வளவு பெரிதாக்கிப் பார்த்தாலும் திரையின் தெளிவு நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் கோப்பு வடிவம்.

i-way : ஐ-வழி; இட-வழி; த-சாலை : தரவு நீள்நெடுஞ்சாலை (மீ நெடுஞ்சாலை).

IZE : ஐஇசட்இ : பெர்சாஃப்ட் நிறுவனம் உருவாக்கிய பீசி (PC). சொல் மேலாண்மை அமைவு. முக்கிய சொற்களை நாமாக நுழைக்கலாம் அல்லது Dear என்ற எழுத்துக்கும் காற்புள்ளிக்கும் இடையில் ஒரு பெயரைச் சேர்ப்பது போன்று ஒரு பட்டியல் அல்லது சூழ்நிலையிலிருந்து உருவாக்கலாம்.