பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/802

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

J

801

Jacquard loom


J

J : ஜே : ஒர் உயர்நிலை கணினி நிரலாக்க மொழி. ஏ. பீ. எல் (APL) என்னும் கணினி மொழியை உருவாக்கிய கென்னத் இவர்சன் (Kenneth Iverson) உருவாக்கிய மொழி இது. ஜே. ஏ. பீ. எல்லின் அடியொற்றிய மொழி. ஏ. பீ. எல் போலவே டாஸ், விண்டோஸ், ஒஎஸ்/2 மற்றும் மெக்கின்டோஷ் பணித்தளங்களில் செயல்படவல்லது. ஜெ மொழி யைப் பெரும்பாலும் கணித வல்லுநர்களே பயன்படுத்துகின்றனர்.

jabber - பிதற்றல் : உளறல் : செயல்பாட்டில் ஏற்பட்ட ஏதோ குறைபாடு காரணமாக, ஒரு பிணையத்தில் தொடர்வோட்டமாய் அனுப்பி வைக்கப்படும் முறைமையற்ற தரவுக் கூறுகள்.

Jack : முளை : ஒரு கம்பி அல்லது மின்சுற்றின் கம்பிகள் இணைக்கப்பட்டுள்ள இணைக்கும் சாதனம். ஃபிளக் பொருத்துவதற்காக ஒழுங்குபடுத்தப்பட்டது. "சாக்கெட்" என்றும் அழைக்கப்படுகிறது.

Jacket - உறை : நெகிழ்வட்டை (டிஸ்கெட்) வைத்துக் கொள்ளும் உறுதியான காகித உறை.

jack in - நுழை முளை : முளை நுழை : புகு முனை : முளை புகு :

1. ஒரு கணினி முறைமையில் பயனாளர் ஒருவர் நுழைபெயர் மற்றும் நுழை சொல் (password) தந்து நுழைதலைக் குறிக்கும். 2. ஒரு பிணையத்தில் பயனாளர் தன் கணினியைப் பிணைத்துக் கொள்ளுதலையும் குறிக்கும். பெரும்பாலும் இணைய தொடர் அரட்டை - (Internet Relay Chat) அல்லது மெய்நிகர் நடப்புப் பாவனைகளில் (Virtual Reality Simulations) பயனாளர் தம்மை நுழைத்துக் கொள்வதைக் குறிக்கும். தொடர் பினைத் துண்டித்துக் கொள்வது, jack out (முளைவிடு/விடுமுளை) எனப்படும்.

Jacquard Joseph Marrie : ஜேக்கு வார்ட் ஜோசப் மேரி : ஜேக்குவார்ட் லூம்" என்னும் நெசவு எந்திரத்தை உருவாக்கியவர். நெய்யப்படும் வடிவங்களை தானாகக் கட்டுப்படுத்த துளையிட்ட அட்டைகளின் வரிசை இதில் முதன் முறையாகப் பயன்படுத்தப்பட்டது.

Jacquard loom - ஜேக்குவார்ட் எந்திர தறி : எந்திரத் தறி : 19ஆம் நூற் றாண்டு நெசவுத் தொழிலையே


51