பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/807

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Job card

806

Job turn around



Job card : வேலை அட்டை : ஒரு வேலையின் ஆரம்பத்தைக் காட்டும் ஜே. சி. எல் JCL சொற்றொடர் உள்ள அட்டை.

Job class : வேலை பிரிவு : செயல்படும்போது தேவைப்படும் கணினி வசதிகளைக் குறிப்பிடும் வேலைபற்றிய விளக்கம்.

Job control language : வேலை கட்டுப்பாட்டு மொழி; ஜே. சி. எல் : கால அளவுகள் போன்ற வேலையின் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட கணினி அமைப்பின் வேலையை வரையறுக்கும் மொழி.

Job control programme : வேலை கட்டுப்பாட்டு நிரல் தொடர் : வேலையின் ஒட்டத்தைக் கட்டுப்படுத்தும் நிரல்களின் தொகுதியைக் கொண்ட நிரல் தொடர்.

Job control statement : வேலை கட்டுப்பாட்டுச் சொற்றொடர் : ஒரு வேலையின் ஒரு அம்சத்தை மட்டும் வரையறுக்கும் வேலைக் கட்டுப்பாட்டு மொழியில் எழுதப்பட்ட ஒரு சொற்றொடர்.

Job number : வேலை எண் : ஒரு வேலைக்குக் கொடுக்கப் பட்ட அடையாள எண்.

job oriented terminal : பணி சார்ந்த முனையம்.

Job processing : வேலை செயலாக்கம் : கணினியில் வேலைகளைக் கையாண்டு செய லாக்கம் செய்தல்.

Job queue : வேலை வரிசை : கணினியில் அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் தரவு மற்றும் நிரலாக்கத் தொடர்களின் தொகுதி. பெரும்பாலான இயக்க அமைப்புகளில், கணினியின் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு வேலையையும் வரிசைப்படுத்தி, அதில் மிகப் பழைய வேலையை அதன் முன்னுரிமைப்படி செய்யும். போதிய மூலாதாரங்கள் இல்லாததால் செயல்படுத்தப்படாத வேலைகள்தான் விதிவிலக்கு.

Job scheduler : வேலை நிரல் படுத்துபவர்; வேலை முறைப் படுத்தி : ஒரு பெரிய கணினி நிறுவனத்தை நடத்துவதில் கணினி இயக்குபவர்களுக்கு உதவுபவர்.

Job stream : வேலை ஓட்டம் ; வேலை ஓடை : இயக்க அமைப்புக்கு உள்ளீடு, ஒன்று அல்லது மேற்பட்ட வேலையாக இருக்கலாம்.

Job turn around : வேலை முடித்துத் தரல் : ஒரு வேலை யைக் கணினி அமைப்பிடம் கொடுத்ததிலிருந்து அதன் அச்சிடப்பட்ட வெளியீடு அந்த வேலையைக் கொடுத்