பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/808

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

job turn around time

807

journal



தவருக்குப் போய்ச் சேரும்வரை ஆகும் நேரம்.

job turn around time : பணி முடிக்கும் நேரம் : பணிச் செயலாக்க நேரம்.

Jobs, Steve : ஜோப்ஸ் ஸ்டீவ் : ஆப்பிள் கணினி நிறுவனத்தினை உருவாக்கியவர்களில் ஒருவர். ஆப்பிள் மெக்கின்டோஷ் உள்ளிட்ட பல நுண்கணினி அமைப்புகளை உருவாக்கியவர்.

Job-to-Job transition : ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு மாற்றல் : ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்காகக் கணினியைத் தயார் செய்து ஒரு நிரலாக்கத் தொடரையும் அதன் தொடர்பான கோப்புகளையும் கண்டுபிடிக்கும் செயல்முறை.

Joggle : குழை : குறிப்பிட்ட வரிசை முறையில் வரிசைப் படுத்துவதற்காக துளையிட்ட அட்டைகளைக் குழைத்தல்.

John McCarthy : ஜான் மெக்கார்த்தி : டார்ட்மவுத் மாநாடு நடத்தி 1956இல் செயற்கை நுண்ணறிவு 'Artificial intelligence' என்ற பெயரை உருவாக்கியவர்.

Join : ஜாய்ன் : சேர்ப்பு : இணை : ஒரு தரவுத் தளத்தில் அட்டவணை மீது செயல்படுத்தப் படும் ஒரு கட்டளை. இரண்டு அட்டவணைகளை இணைத்து மூன்றாவதாக ஒர் அட்டவணையை உருவாக்கும் கட்டளை. இரு அட்டவணைகளிலும் முதன்மைப் புலங்களை (key fields) ஒப்பிட்டு ஒன்றாயிருக்கும் ஏடுகளை இணைத்து மூன்றாவது அட்டவணை உருவாக்கப்படுகிறது.

join condition : சேர்ப்பு நிபந்தனைகள் :

joliet : ஜோலியட் : ஐஎஸ்ஓ 9660 (1988) தரக் கட்டுப்பாட்டின் நீட்டித்த செந்தர வரையறைகள். நீண்ட கோப்புப் பெயர்களை ஏற்கின்றன. 8. 3 எழுத்துப் பெயர் மரபுக்கு மாற்றானது. விண்டோஸ் 95 போன்ற இயக்க முறைமைகள் நீண்ட கோப்புப் பெயர்களை ஏற்கின்றன. இந்த முறைமைகளில் பயன்படுத்தக் கூடிய குறுவட்டுகளில் இந்தப் கோப்பு வடிவாக்கம் பயன் படுத்தப்படுகிறது.

Josephson junction : Gஜோசப்சன் இணைப்பு : சூப்பர் குளிர் மின்சுற்றுகளின் பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படும் அதிகத் திறனுள்ள தரவு சேமிப்பு அமைப்பு. க்ரையோ மின்னணு சேமிப்பு அமைப்பு ஆராய்ச்சி நிலையில் உள்ளது.

journal : ஆய்வேடு, தாளிகை; குறிப்பேடு : ஒரு கணினியில்