பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/810

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

JUG

809

julian calendar



என்று பொருள்படும் Joint Photographic Experts'Group என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். வரிசையற்ற கொசைன் மாற்றுகையைப் (Descrete Cosine Transform) பயன்படுத்தி படிமங்களை (images) இறுக்கிய வடிவத்தில் சேமிப்பதற்கான ஐஎஸ்ஓ/ஐடீயூ தர வரையறை. 100 : 1 விகித அளவுக்கு இறுக்கிச் சுருக்க முடியும். ஆனால் தகவல் துல்லிய இழப்பு இருக்கவே செய்யும். 20 : 1 அளவில் சுருக் கினால் ஓரளவு தகவல் இழப்பு வெளிப்படையாகத் தெரியாத அளவுக்கு இருக்கும். 2. ஒரு வரைகலைப் படம் ஜேபெக் வடிவாக்கத்தில் ஒரு கோப்பாக சேமிக்கப்படும் முறை.

JUG : ஐக் : Joint Users Group என் பதன் குறும் பெயர். இலக்க முறை கணினி பயன்படுத்து வோர் குழுக்களின் ஓர் அமைப்பு.

jughead : ஜூஹெட் : ஜான்ஸி யின் உலகளாவிய கோஃபர் படி நிலை அகழ்வாய்வும் திரைக் காட்சியும் என்று பொருள்படும் Jonzy's Universal Gopher Hierarchy Excavation and Display என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு சொல்லைத் தந்து தேடும் முறையில் கோஃபர் வெளியிலுள்ள கோப்பகங்களைத் தேடிக் கண் படறியப் 'பயனாளருக்கு உதவும் இணைய சேவை. மேல்நிலை கோஃபர் பட்டி (menu) களில் உள்ள கோப்பகத் தலைப்பு களில் காணும் முக்கிய சொற் களை ஒரு ஜூஹெட் வழங்கன் கணினி அகர வரிசைப்படுத்தி வைக்கிறது. ஆனால் அது கோப் பகங்களிலுள்ள கோப்புகளை அகரவரிசைப்படுத்துவதில்லை .

Juke boxes : ஜுக் பெட்டிகள் : நவீன ஜுக் பெட்டிகள் நுண் கணினி சார்ந்த அமைப்புகள். இதன் இசைத் தட்டை இயக் கும் அமைப்பின் கட்டுப்பாடு, தொலைவில் ஏற்றப்பட்டுள்ள நாணயம் மூலம் இயங்கும் சுவர் பெட்டிகளில் உள்ளது.

julian calendar : ஜூலியன் நாள் காட்டி : கி. மு. 46ஆம் ஆண்டு ஜூலியஸ் சீசரால் அறிமுகப் படுத்தப்பட்ட நாள்காட்டி. சந்திரனை அடிப்படையாகக் கொண்ட முந்தைய காலண் டருக்குப் பதிலாக இது புகுத்தப் பட்டது. ஜூலியன் நாட்காட்டி முறையில் சராசரியாக ஆண் டுக்கு 365 நாட்கள். ஒவ்வொரு நான்காண்டிலும் ஒரு லீப் ஆண்டு . ஆக, ஆண்டுக்கு 365. 25 நாட்கள். ஆனால், உண்மையில் சூரிய ஆண்டு என்பது சற்றே குறைவான நாட்களைக்