பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/814

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

KEE

813

Kermit



சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.


KEE : கேஇஇ : Knọwledge Engineering Environment என்பதன் குறும்பெயர்.


Keep out areas : தவிர் பரப்புப் பகுதிகள் : அச்சிட்ட மின்சுற்று வெளி அமைப்பில் பயன் படுத்துவோர் குறிப்பிடும் பகுதிகள். இதில் உறுப்புகள் அல்லது மின்சுற்றுப் பாதைகள் குறிப் பிடக்கூடாது. காட்/காம் முறையிலும் இதைத் தவிர்க்க வேண்டும்.


Kelvin : கெல்வின் : செல்ஷியஸ் டிகிரியில் குறிப்பிடப்படும் எஸ். ஐ. மெட்ரிக் அமைப்பின் வெப்ப நிலை அளக்கும் அலகு.


Kelvin, William Thomson (1824-1907) : கெல்வின், வில்லியம் தாம்சன் (1824-1907) : ஸ்காட்லாந்து கணித மேதை. மாறு பாட்டு அலசலை எவ்வாறு உருவாக்குவது என்பதற்கான கொள்கைகளை 1875இல் விவரித்தவர்.


Kemeny John : கெம்னை ஜான் : 1964இல் டார்ட்மவுத் கல்லூரியில் தாமஸ் குர்ட்சுடன் சேர்ந்து பேசிக் என்னும் கணினி மொழியை உருவாக்கினார். கற்பதற்கு எளியது. பயன்படுத்துவதற்கு எளியது. அல்ஜிப்ரா முறை நிரலாக்கத் தொடர் மொழி பயன்படுத்த எளியது. டார்ட்மவுத் காலப் பங்கீட்டு அமைப்பையும் உருவாக்கினார்.


kerberos or kerberos : கெர்பராஸ் : எஐடீ நிறுவனம் உருவாக்கிய ஒரு பிணைய செல்லு படியாக்க நெறிமுறை. பிணையத்தில் புகுகின்ற ஒரு பயனாளரின் அடையாளத்தைச் சரி பார்த்து அனுமதிக்கிறது. மறைக் குறியியல் முறையில் தரவு தொடர்பை மறையாக்கம் செய்கிறது. இணையத்திலிருந்து (http : /Aweb. mit. edu/kerberos/www.) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். பல்வேறுவகையில் விற்பனை செய்யப்படும் பல்வேறு மென் பொருள் தொகுப்புடனும் கிடைக்கிறது.


Kermit : கெர்மிட் : கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது. இரைச்சலான வழித் தடத்திலும் துல்லியமாக அமைப்பை ஏற்றது. சிறு மற்றும் பெரு கணிணிகளுக்குப் புகழ் பெற்றது. 7பிட் அஸ்கி