பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/815

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

kern

814

keyboard buffer



அமைப்புகளில் துண்மி சார்ந்த மாற்றல்களுக்கு புகழ் பெற்றது.

kern : நெருக்கம் : குறிப்பிட்ட இரண்டு எழுத்துக் குறிகளுக்கு இடையேயுள்ள இடை வெளியை மாற்றியமைத்தல். இதனால் நெருடலின்றிப் படிக்க முடிகிறது. அச்சுக்கோப்பில் எழுத்தமைவில் சமனாக் கம் இயலுகிறது. (எ-டு) : க ி என்ற இரு எழுத்துக் குறிகளுக்கு இடையேயான இடைவெளி குறைக்கப்படும்போது கி எனத் தோற்றமளிக்கும்.

Kernel : கரு உருவாக்க மையம் : கணினி பணிகளின் மிகப் பழையவற்றைச் செயல்படுத்தும் இயக்க அமைப்பிலுள்ள நிரல் தொடர் தொகுதி.

Kerning : நெருக்கல் : குறிப்பிட்ட எழுத்துகளின் இணைகளுக்கு இடையே உள்ள கூடுதல் வெண்மை இடை வெளியைக் குறைப்பது.

KES : கேஇஎஸ் : Knowledge Engineering System என்பதன் குறும்பெயர்.

KET : Kharagpur Expert Tool என்பதன் குறும்பெயர்.

Key : விசை, திறவு; விரற்கட்டை, குமிழ் சாவி : 1. ஒரு பதிவேட்டை அடையாளம் காட்டும் புலங்கள் அல்லது கட்டுப்பாட்டுப் புலம் பார்க்க Primary key. 2. வகைப் படுத்தப்பட்ட வரிசையில் ஒரு பதிவேட்டின் நிலையினை முடிவு செய்யும் புலம். பார்க்க Major sort key, Minor sort key. 3. தட்டச்சுப் பொறி அல்லது காட்சித் திரை விசைப்பலகை போன்ற கையால் இயக்கும் எந்திரங்களில் உள்ள விசை, 4. விசைப் பலகை மூலம் ஒரு கணினி அமைப்பில் தரவுகளை நுழைப்பது. Keyb : கீபி : பயன்படுத்தப்படும் விசைப்பலகையைப் பற்றிய தரவுவைக் கொண்ட டாஸ் (DOS) கட்டளை.

Keyboard விசைப்பலகை; தட்டச்சுப் பலகை; விரற்கட் டைப் பட்டடை : கணினியின் சேமிப்பகத்திற்குள் தரவுகளையும், நிரலாக்கத் தொடரையும் விசைமூலம் அனுப்பும் உள்ளிட்டுச் சாதனம்.

keyboard buffer : விசைபலகை இடையகம் : கணினி நினைவகத்தில் ஒரு குறிப்பிட்ட சிறிய பகுதி. விசைப்பலகையில் மிக அண்மையில் உள்ளீடு செய்த எழுத்துகளைச் சேமித்து வைக்கும் இடம். செயல்முறைப்படுத் தப்படுவதற்கு முன்பாக உள் வீட்டுத் தரவு இந்த நினைவகத்