பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/818

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

keyboard to - tape system

817

key escrow



தரவுவைத் தட்டச்சு செய்வதன் மூலம் தரவுகள் நேரடியாக வட்டுக்குள் நுழையும் தரவு நுழைவு அமைப்பு.

keyboard to - tape system : விசைப் பலகையிலிருந்து நாடா முறைமைக்கு : விசைப்பலகை யில் தரவுகளைத் தட்டச்சு செய்து நேரடியாக நாடாவுக்குள் நுழைக்கும் தரவு நுழைவு அமைப்பு.

Key bounce : விசை திரும்புதல் : சில மோசமாக வடிவமைக்கப் பட்ட விசைப்பலகையின் தன்மை. விசையை ஒவ்வொரு முறை அழுத்தும்போதும் எழுத்து இரண்டு தடவைகள் பதிவாகும்.

Key cap : விசை மூடி : விசைப் பலகை விசையின் மேல் பகுதி. மாற்றக் கூடியது. பொதுவாகப் பயன்படுத்தப்படும் குறியீடுகளை அடையாளம் காண சிறப்பு விசை மூடிகளைக் கொண்டு மாற்றியமைக்கலாம்.

Key chord : விசைக்கயிறு : இரண்டு அல்லது மேற்பட்ட விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தி தனி நுண்ணாய்வுக் (ஸ்கேன்) குறியீட்டை உருவாக்குதல்.

Key click : வரிசை சொடுக்கு ஒசை : ஒரு விசையை அழுத்தியவுடன் கேட்கக் கூடிய ஓசை. இதை மாற்றியமைக்கலாம்.

Key command : வரிசை ஆணை : கணினியில் கட்டளைகளாகப் பயன்படுத்தப்படும் விசைத் தொகுதி.

Key data entry device : விசை தரவு நுழைவுச் சாதனம் : கணினி கருவி ஏற்றுக் கொள்ளும் வகை யில் தரவுகளைத் தயார் செய்யப் பயன்படுத்தும் விசைத் துளை எந்திரங்கள், விசை யிலிருந்து வட்டுக்கான அலகுகள், விசை யிலிருந்து நாடாவுக்கான அலகுகள்.

key disk : மென்பூட்டு/திறவு வட்டு

Key-driven : விசை இயக்கம் : விசைளை அழுத்துவதன் மூலம் இயக்கப்படும் சாதனம்.

Key entry : விசை நுழைவு : விசைப்பலகை மூலம் கை களால் தரவுகளை அனுப்புவது.

key escrow : ஒரு மறையாக்க முறை. அரசு முகமையினால் அங்கீகரிக்கப் பட்ட ஒரு தனித் திறவி (Private key) மூன்றாம். நபர்களுக்கு வழங்கப்படும். அத்திறவி மூலம் மறையாக்கம் செய்யப்பட்டு அனுப்பப்படும் செய்திகளை அரசு விரும்பினால் படித்துக் கொள்ள முடியும்.

52