பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/819

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

key field

818

key punch department



Key field : குறிப்பு புலம் ; விசைப்புலம் : ஒரு பதிவேட்டி லிருந்து மற்றொன்றுக்கு வேறு பாடு காட்டும் புலம்.

Key field : குறிப்புப் புலம்.

key-frame : முதன்மைச் சட்டம் : ஒர் அசைவூட்ட நுட்பம். ஒரு பொருளின் தொடக்க நிலை மற்றும் இறுதி நிலைப்பாட் டைக் குறிப்பிட்டு விட்டால் இடைப்பட்ட சட்டங்கள் அனைத்தையும் கணினியே தீர் மானித்து மிக நளினமான தானி யங்கு அசைவூட்டப் படத்தை உருவாக்கித் தரும். இந்த நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் பெரும்பாலான கதிர்-வரைவு கணினி அசைவூட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

Key in : விசை நுழை : விசைப் பலகையில் தட்டச்சு செய்வதன் மூலம் தரவுகளை நுழைத்தல்.

Keying error rate : விசையிடலில் பிழைவிகிதம் : மொத்த மாக விசையிடப்பட்ட எழுத்து களில் தவறாக விசையிடப்பட்ட வற்றின் சதவிகித அளவு.

Key map . முக்கிய வரைபடம் : சில குறிப்பிட்ட மிடி (MIDI) செய்திகளுக்கு முக்கிய மதிப்புகளை மாற்றித் தரும் மிடி ஒட்டு வரைபட நுழைவு. சான்று : குறிப்பிட்ட ஆக்டேவில்மெலடி இசைக்கருவி அல்லது பெர் குஷன் கருவியை இசைக்கப் பயன்படுத்தப்படும் விசைகள்.

Key pad : விசை அட்டை எண் தளம் : 0 - 9 வரையிலான பதின்ம இயக்க விசைகளையும், இரண்டு சிறப்புப் பணி விசைகளையும் பயன்படுத்தும் உள் வீட்டுச் சாதனம். தனி சாதன மாகவும் பயன்படுகிறது அல் லது சிக்கனத்தின் விளைவான Qwerty விசைப்பலகையின் வலது புறத்திலும் இடம் பெறுகிறது.

Key punch : விசைதுளை துளைப்பி : கணினி படிப்பியில் படிப்பதற்காக தரவுகளைக் குறிப்பிடும் துளையிடும் அட் டைகளில் துளையிட்டுப் பயன் படுத்தப்படும் விசைப்பலகை இயக்கும் சாதனம்.

Key punching : விசைதுளையிடல் : மூலத் தரவுகளை துளையிடும் அட்டைகளில் பதிவு செய்யும் செயல் முறை. இயக்குபவர் மூல ஆவணங்களைப் படித்து விசைத்துளை எந்திரங்களில் விசையை அழுத்தி மூல ஆவண தரவுவை துளையிட்ட அட்டைகளாக மாற்றுகிறார்.

Key punch department : விசைத் துளைப் பிரிவு : data entry department).