பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/820

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

keypunch machine

819

key stroke



Keypunch machine : விசைத்துளை எந்திரம் : துளையிட்ட அட்டை தரவு நுழைவு எந்திரம். வெற்று அட்டைகளின் தொகுதி ஹாப்பரில் வைக்கப்பட்டபின் இயக்குபவரின் கட்டளையின் படி துளையிடும் இடத்திற்கு ஒரு அட்டையை எந்திரம் அனுப்புகிறது. எழுத்துகள் தட்டச்சு செய்யப்பட்டவுடன், தொடர் எழுத்தச்சுகள் தேர்ந் தெடுக்கப்பட்ட அட்டை பத்தியில் தேவையான இடங்களில் துளைகளை இடுகின்றன.

Key punch operator : விசை துளை இயக்குபவர் : KPO என்று சுருக்கி அழைக்கப்படும். விசைத் துளை எந்திரத்தை இயக்கும் நபர். கணினியில் தரவுகளை நுழைக்கும் ஆரம்பகால முறை களில் இதுவும் ஒன்று. விசைத் துளை எந்திரம் தட்டச்சு செய்யப் பட்ட நுழைவுகளை காகித அட்டைகளில் தொடர்ச்சியாக குறியீடாக மாற்றியும் மின்எந்திர அட்டை படிப்பியில் இது படிக்கப்படும். விசைத் துளை எந்திரங்கள் இப்போது அரிதாகவே பயன்படுத்தப்படு கின்றன. நுழைவுகளைச் செய்ய வேகமான ஊடகங்கள் வந்து விட்டன. என்றாலும், விசைத் துளை இயக்குபவர் என்ற பதம் நிலைத்து விட்டது.

Key record : குமிழ் குறிப்பு

key recovery : திறவி மீட்சி : ஒரு தனித் திறவி (private key) வழி முறை. அரசு முகமை போன்று அதிகாரம் பெற்ற ஒருவர் தனிச் சிறப்பான மென்பொருளைப் பயன்படுத்தி மறையாக்கம் செய்யப்பட்ட தகவலிலிருந்து திறவியை பிரித்தெடுக்க முடி யும். அமெரிக்காவில் தற் போதுள்ள சட்டப்படி 1998-க் குப் பிறகு அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எந்த வொரு மறையாக்க மென்பொரு ளும் திறவி மீட்சி வசதியைப் பெற்றிருக்க வேண்டும்.

key, shift : தகர்த்து விசை

Keysight : முக்கியப் பார்வை : ஒரு எந்திரம் மனிதனின் பார்வை அமைப்பு. GM அமைப்பு என்றும் சொல்லலாம்.

Key stations : முக்கிய நிலையங்கள் : பலர் பயன்படுத்தும் அமைப்புகளில் தரவு உள்ளிட்டுக்குப் பயன்படுத்தப்படும் முனையங்கள்.

keystroke : விசையழுத்தம் : ஒரு குறிப்பிட்ட எழுத்தை உள்ளீடு செய்யவோ அல்லது ஒரு கட்டளையை நிறைவேற்றும் பொருட்டோ விசைப்பலகை யிலுள்ள ஒரு விசையை அழுத்தும் நடவடிக்கை. சில