பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/824

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

kinetics

823

Knowledge build


படுத்தாத பணிச்சூழலுக்குகந்த விசைப்பலகை வடிவமைப்பு.

kinetics : இயக்கியல்.

kiosk : கணினி முனையம் : பொது மக்களுக்குத் தேவையான தரவுகளை பல்லூடகத் திரைக்காட்சி மூலம் தெரிவிக்கும் கணினி மையம்.

kiosk mode : கணினியகப் பாங்கு.

KIPS : கிப்ஸ் : எதிர்பார்க்கப்படுகின்ற ஐந்தாம் தலைமுறை கணினிக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயர்.

Kiudging : கியுட்ஜிங் : நிரலாக்கத் தொடரின் நோக்கமாக இல்லையென்றாலும் தொழில் நுட்ப முறையில் முடியக்கூடிய ஏதாவது செய்வது. 'hacking என்றும் அழைக்கப்படும்.

Kludge : ஒப்பேற்றல் : ஒரு கணினி அமைப்பில் பொருத்தப்பட்ட தவறான இணைப்புள்ள பாகங்களின் தொகுதி பற்றிய மாற்று அமைப்பு.

Knob : கைப்பிடி குமிழ்க்கைப்பிடி

Knockout நாக் அவுட் : கம்மோடர் 64 வீட்டு கணினிக்கான மென்பொருள். பெட்டி வளையத்தைப்போலச் செய்து காட்டி இரண்டு பெட்டிகள் அதன் மீது வைக்கப்படுதல்.

knowbot : நோபாட் : அறிந்திரன் : அறிவு + எந்திரன் (Knowledge+ Robot) என்பதன் சுருக்கம். இது ஒரு செயற்கை நுண்ணறிவு நிரல். முன் வரையறுக்கப்பட்ட சில விதிமுறைகளின் அடிப் படையில் இந்த நிரல் செயல்படுகிறது. இணையம் போன்ற ஒரு மாபெரும் பிணையத்தில் ஒரு குறிப்பிட்ட கோப்பினைத் தேடுதல் அல்லது குறிப்பிட்ட தரவுவைக் கொண்டுள்ள ஒர் ஆவணத்தைத் தேடுதல் - இது போன்ற பணிகளுக்காக அறிந்திரன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Knowledge : ஆய்வறிவு : சால்பு.

Knowledge acquisition : அறிவு சேர்த்தல் : அறிவு ஈட்டல்.

Knowledge base : அறிவு ஆதாரம் : அறிவுத் தளம் : ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றிய அறிவின் தரவுத் தளம். உண்மைகள், மதிப்பீடுகள், நடைமுறைகள் போன்ற சிக்கல் தீர்வுக்கான வழிமுறைகளைக் கொண்டது.

Knowledge based system : அறிவுசார்ந்த அமைப்பு : ஒரு பொருள் பற்றிய அறிவின் தரவுத்தளத்தைப் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு.

Knowledge build : அறிவுக்கட்டுமானம் : வேக்ஸ் சூப்பர் மென் பொருள் தொடர். பிசிஎஸ் நிறுவனத்தின் புதிய தலைமுறை உற்பத்திக் கருவி.