பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/825

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Knowledge domain

824

korn shell


Knowledge domain : அறிவுப்பகுதி : ஒரு வல்லுநர் அமைப்பில் குறிப்பிட்ட அறிவின் பகுதி.

knowledge engineer : அறிவுப் பொறியாளர் : தேவையான அறிவையெல்லாம் தேடிப்பெற்று அவற்றை ஒரு நிரலாக வடிவமைத்து ஒரு வல்லுநர் முறைமையை (Expert System) கட்டமைக்கும் ஒரு கணினி அறிவியலாளர்.

Knowledge engineering : அறிவுப் பொறியியல் : சாதாரணமாக மனிதப் பட்டறிவில் உயர்நிலை தேவைப்படுகின்ற சிக்கல்களைத் தீர்க்க கணினி அமைப்புகளில் அறிவை ஒருங்கிணைக்கும் பொறியியல் பிரிவு.

Knowledge industries : அறிவுத் தொழில்கள் : தரவு செயலாக்கம் செய்து தரவு பொருட்கள் மற்றும் சேவைகளை அளிக்கும் தொழில்கள்.

Knowledge information : அறிவுத் தகவல்.

Knowledge information processing system : அறிவுத் தரவு செயற்பாட்டு முறைமை.

Knowledge link : அறிவு இணைப்பு : ஐபிஎம் நிறுவன கணினிகளுக்கும், துறைசார்ந்த வாக்ஸ் சூப்பர் பணிகளுக்கும் இணைப்பு ஏற்படுத்த வடிவமைக்கப்பட்ட அறிவு இணைப்பு. இதன் மூலம் நிறுவனத்திற்கும், துறைக்குமான கணிப்புச் செயல்கள் சுமுகமாகச் செல்ல முடிகிறது.

Knowledge manager : அறிவு மேலாளர் : நுண் தரவுத்தள கணினி அமைப்புகளிலிருந்து வரும் டிபிஎஸ் அமைப்பு. இதன் மூலம் எண்ணற்ற கோப்பு களைக் கையாள பயனாளருக்கு அனுமதி கிடைக்கிறது.

Knowledge representation : அறிவு குறித்தல்; அறிவு குறிப்பிடு முறை : ஒரு சிக்கலுக்குத் தேவைப்படும் தகவலை வடிவமைத்து ஒருங்குபடுத்துதல்.

Knowledge work : அறிவு வேலை : தகவலைப் பெறுதல், செயலாக்கப் புகுதல் மற்றும் அனுப்புதல் உள்ளடக்கிய வேலைகள்.

Knowledge workers : அறிவுப் பணியாளர்கள் : தரவுவை உருவாக்கல், பயன்படுத்தல் மற்றும் விநியோகித்தல் போன்றவற்றை முக்கிய வேலையாகக் கொண்டு பணியாற்றுபவர்கள்.

korn shell : கார்ன் செயல்தளம் : யூனிக்ஸ் இயக்க முறைமையில் உள்ள கட்டளைவரி இடைமுகம். போர்னே (Bourne) மற்றும் சிசெயல் தளங்களிலுள்ள கூறுகளை உள்ளடக்கியது. கார்ன் செயல்தளம் போர்னே செயல் தளத்துடன் முழுமையான