பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/827

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

L1

826

labeled common


L

L1 cache : எல்1 கேஷ்; நிலை 1 இடைமாற்றகம் : இன்டெல் 1486 மற்றும் அதைவிட மேம்பட்ட செயலிகளில் உள்ளமைக்கப்பட்டுள்ள இடைமாற்று நினைவகம். நிலை 1 இடைமாற்றகம் பொதுவாக 8கேபி கொள்திறன் உள்ளது. ஒற்றைக் கடிகாரச் சுழற்சியில் படித்துவிட முடியும். எனவே தொடக்க காலங்களில் இது பரிசோதிக்கப்பட்டது. இன்டெல் ஐ1486 ஒரேயொரு நிலை 1 இடைமாற்றகம் கொண்டது. பென்டியம் செயலியில் இரண்டு உண்டு. ஒன்று ஆணைகளுக்கு, மற்றொன்று தரவுகளுக்கு.

L2 cache : எல்2 கேஷ்; நிலை2 இடைமாற்றகம் : ஐ1486 மற்றும் அதனிலும் மேம்பட்ட செயலிகள் பயன்படுத்திக் கொள்ளும் இடைமாற்று நினைவகம். இது செயலிக்கு அருகில் தாய்ப் பலகையில் பொருத்தப்பட்டுள்ள நிலை ரேம் (static RAM) ஆகும். நிலை 2 இடைமாற்றகம் பொதுவாக 128 கேபி முதல் 1 எம்பி வரை இருக்கலாம். முதன்மை நினைவகத்தைவிட வேகமானது. ஆனால், செயலிக்குள்ளே உள்ளமைந்துள்ள நிலை 1 இடைமாற்று நினைவகத்தைவிட மெதுவானது.

L8R : எல்8ஆர் : பிறகு என்று பொருள்படும் Later என்ற சொல்லை செல்லமாய்ச் சுருக்கமாகக் குறிப்பிடல். சியூஎல்8ஆர் (See you Later) என்பதைப் போன்றது. மின் அஞ்சல், யூஸ்நெட் செய்திக் குழுக்களில் தற்காலிகமாக விடைபெறும்போது பயன்படுத்தப்படுவது.

. la : எல்ஏ : ஓர் இணையதள முகவரி லாவோஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

label : அடையாளம்; குறி : முகப்புச் சீட்டு; முகப்பு : ஒரு நிரலை விவரிக்க அல்லது அடையாளம் காண கணினி நிரல் தொடரில் பயன்படும் பெயர் அல்லது அடையாளம் காட்டி. வாக்கியச் செய்தி, தரவு மதிப்பு, பதிவு, பொருள் அல்லது கோப்பு போன்றவைகள் இவ்வாறு பயன்படுத்தப்படும்.

labeled common : பொதுவான சீட்டு : நிரல் தொடர்அலகுகளுக்குள் பகிர்ந்து கொள்ளப்படும் நினைவகப் பகுதி. அதற்கென்று தனியாகப் பெயர் கொடுக்கப்