பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/828

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

label prefix

827

landing zone


படும். Blank (unlabelled) Common என்பதற்கு எதிர்ச் சொல்.

label prefix : முகப்புச் சீட்டு முன் சொல்; முகப்புச் சீட்டு முன்னொட்டுச்சொல் : அகலத்தாளில் அரை நுழைவி ஆரம்பத்தில் தட்டச்சு செய்யப்படும் எழுத்து. சான்றாக 1-2-3இல் ஒற்றை மேற்கோள்குறி வருமானால் அரையில் இடதுபக்கமாக ஒழுங்குபடுத்துமாறும், இரட்டை மேற்கோள்குறி வருமானால் வலதுபக்கம் ஒழுங்குபடுத்து மாறும் நிரல் ஏற்கப்படும்.

label record : சீட்டுப் பதிவேடு : காந்த நாடாவில் சேமிக்கப்படும் கோப்பைப் பற்றிய தரவைக் கொண்டுள்ள காந்தப் பதிவேடு.

lable, header : தலைப்புச் சிட்டை.

lab hours : செய்முறை விளக்கம்; ஆய்வு நேரம்.

lable identifier : சிட்டை அடையாளம் காட்டி.

lable, trailer : முன்னோட்டச் சிட்டை.

lag : இடைவெளி; பிந்துதல் : இரண்டு நிகழ்வுகள், எந்திர அமைப்புகள் அல்லது நிலைகளுக்கும் இடையிலுள்ள வேறுபாடு.

LAN : லேன் : Local Area Network என்பதன் குறும்பெயர். வன்பொருள், மென்பொருள், அமைப்புகள் ஆகியவைகள் குறிப்பிட்ட இடைவெளிக்குள் தரவுத் தொடர்பு ஏற்படுத்துகின்றன.

land : பொருத்துப் பரப்பு : மின்னணு பொருட்களைப் பொருத்துவதற்கு அச்சிடப்பட்ட மின்சுற்று அட்டையில் உள்ள இடப்பகுதி.

Land information system : பொருத்துபரப்புதகவல் மையம் : தரை மேலாண்மை தகவலை ஆராயப் பயன்படுத்தும் ஒரு கணினி அமைப்பு (வன்பொருள் மற்றும் மென்பொருள்). இயற்கை மூலாதாரங்களின் விநியோகம் நிலைப் பயன்படுத்தும் முனைகள், சொத்து உரிமை, வாடகையிருப்பு மதிப்புகள் போன்றவைகள் இதற்குச் சான்று. தரை தகவல் மையம் ஒரு நேர்முக அமைப்பு அல்ல. வெளிப்புறத்தில் இருந்து அடிப்படைத் தகவலை விநாடிக்கு விநாடி பெறுகிறது. நிலப்படம் அமைத்தல், தகவல் மற்றும் தரவுத்தளங்கள் இவற்றின் பணிகள்.

landing zone : தரையிறங்கும் பகுதி : படி/எழுது முனையை நிறுத்துவதற்கான வன்வட்டின் பகுதி. முந்தைய வன்வட்டு அமைப்பில் நிறுத்துவதற்கான