பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

AppleTalk

82

application-centric



உருவாக்கப்படும் சிறுசிறு செயற்கூறுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவை ஹெச்சீஎம்எல் மொழியில் உருவாக்கப்படும் வரைப்பக்கங்களின் உள்ளிலிருந்து செயல்படுகின்றன.

AppleTalk : ஆப்பிள்டாக் : ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய செலவு குறைந்த குறும் பரப்புப்பிணையம் (Local Area Network). இதில் ஆப்பிள் மற்றும் ஆப்பிள் அல்லாத கணினிகள் தொடர்பு கொண்டு அச்சுப் பொறி மற்றும் கோப்புகள் போன்ற வளங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும். ஆப்பிள் அல்லாத கணினிகள் ஆப்பிள்டாக்கின் மென்பொருளையும் வன்பொருளையும் கொண்டிருக்க வேண்டும். ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ மாதிரியை ஒத்த நெறிமுறைகளையே இந்தப் பிணையம் பின்பற்றுகிறது. சட்டம் (frame) எனப்படும் பொட்டலங்களில் தகவல் பரிமாற்றம் செய்கிறது. ஒர் ஆப்பிள்டாக் பிணையம் இன்னொரு ஆப்பிள்டாக் பிணையத்துடன் இணைவி (bridge) மூலமாகவும், வேறுபட்ட பிணையங்களுடன் நுழைவி (gateway) மூலமாகவும் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

application : பயன்பாடு; பயன்பாட்டுத் தொகுப்பு : கணினியில் சொல்செயலி, கணக்குவழக்கு, கையிருப்பு மேலாண்மை போன்ற ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்ற உதவும் வகையில் உருவாக்கப்படும் மென்பொருள் தொகுப்பு.

application backlog : பயன்பாட்டுத் தேக்கம்

application binary interface (ABI) : பயன்பாட்டு இரும இடைமுகம் : ஒரு இயக்க முறைமையில் இயங்கு நிலைக்கோப்பு (executable file), கணினியின் வன்பொருள் உறுப்புகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது, தகவல் எவ்வாறு பதியப்படுகிறது என்பதை வரையறுக்கும் நிரல் தொகுதி.

application-Centric : பயன்பாட்டுத் தொகுப்பை மையப் படுத்திய; பயன்பாட்டு முக்கியத்துவமுள்ள : ஒரு கணினி இயக்க முறைமையின் (operating system) பண்பியல்பைப் பற்றியது. ஒரு பயனாளர் ஒரு குறிப்பிட்ட வகை ஆவணத்தை (சொல் செயலிக் கோப்புகள், விரிதாள் கள்) திறக்க, உருவாக்க விரும்பினால் அதற்குரிய பயன்பாட்டுத் தொகுப்பை முதலில் இயக்க வேண்டும். கட்டளை வரி பணிச்சூழல் கொண்ட டாஸ், வரைகலைச சூழலை வழங்கும் விண்டோஸ் 3. x