பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/834

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

laser print

833

latch registers



பிசிஎல் 5-ன் மூலம் மேம் படுத்தலாம்.

laser print : ஒளி அச்சு.

laser printer : லேசர் அச்சுப்பொறி :

ஒரு லேசர் கதிரைப் பயன்படுத்தி சுழலும் உருளையில் உருவங்களைப் பதிக்கும் அழுத்தம் தராத அச்சுப் பொறி. லேசர் தோன்றும் பகுதிகளில் மை துளை உருளை எடுத்துக் கொள்கிறது. உருளையின் மேல் உள்ள இப்பகுதிகள் அழுத்தப்பட்டு காகிதத்தில் கலந்து எழுத்துகள் உருவாகின்றன.

laser storage : லேசர் சேமிப்பகம்; லேசர் தேக்ககம் : உலோக மேற்பரப்பின் மேல் லேசர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி குறியீடு அமைக்கும் துணை சேமிப்பகச் சாதனம்.

laser writer : லேசர் எழுது பொறி : ஆப்பிள் நிறுவனத்தின் லேசர் அச்சுப் பொறி. மோட்டோ ரோலா 68020 சில்லினால் இயக்கப்பட்டு 2 மீமிகு எண்மிகளுடன் வருவது. .

last in first out : கடைபுகு முதல் விடு : ஒர் அடுக்கில் (stack) உள்ள உறுப்புகளைக் கையாளும் வழி முறை. ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கி வைக்கும் பொருள் களில் (சாப்பாட்டுத் தட்டுகள்) கடைசியாக பொருளைத்தான்முதலில் எடுப்போம். ஒரு சாரையில் (queue) இருக்கும் உறுப்புகளைக் கையாளும் (firstin firstout) மாறானது.

last modified : இறுதியாகத் திருத்தப்பட்டது. LAT : லேட் : Local Area Transport என்பதன் குறும்பெயர். டெக் நெட் சூழ்நிலையில் முகப்பு போக்குவரத்தினைக் கட்டுப் படுத்த டிஜிட்டல் நிறுவனம் உருவாக்கிய தரவு தொடர்பு வரைமுறை.

latch : லேட்ச் : புதிய தரவு அளிக்கப்படும்வரை அதன் அளவை உள்ளடக்கத்தை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு மின்னணு மின்சுற்று.

latch registers : லேட்ச் பதிவகங்கள் : ஒளிக்காட்சி தாங்கி யில் உள்ள குறிப்பிட்ட நினைவக முகவரியில் நான்கு எண்மிகள் அளவு தரவுவை வைத்துக் கொள்ளும் ஒரு எண்மி லேட்ச் பதிவகங்கள் ஈ. ஜி. ஏ. வில் நான்கு உள்ளன. தாங்கி (Buffer) யில் இருந்து மையச் செயலகம் படிக்கும்போது, லேட்ச் பதிவ கங்கள் நிரம்புகின்றன. தாங்கியில் மையச் செயலகம் எழுதும் போது லேட்ச் உள்ளடக்கங்கள் அது தொடர்பான நினைவகவார்ப்புரு:Lh{rule}}