பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/838

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

LCD watch

837

leafless chip carrier



LCD watch : எல். சி. டி கடிகாரம் : திரவ படிவ காட்சித்திரை கடிகாரம். வரி கட்டுப்பாடு வரையறுப்பது.

LDL : எல்டிஎல் : Language Description Language என்பதன் குறும்பெயர். ஒரு மொழியைப் பற்றி விவரிக்கும் பெருமொழி.

lead : லீட் : ஒரு மின் சுற்று அம்சத்தின் இணைப்பு.

leaded chip carrier : வீட்டு சிப்பு இடை நினைவகம் : நான்கு பக்கங்களிலும் இணைப்புகளைக் கொண்டுள்ள சதுர சில்லு. (டி. ஐ. பியை விட அதிக உ/வெ பாதைகளைத் தருவது).

leader : முன்னோடி தலைப்பு : ஒரு சுருணை காந்த நாடா அல்லது காகித நாடாவில் ஆரம்பத்தில் உள்ள நாடாவின் வெற்றுப் பகுதி.

lead frame : முக்கியப்படம் : ஒரு ஐ. சி. யில் உள்ள லீடை வைத்துக் கொள்கின்ற லீட் அசெம்பிளி யின் பகுதி. படம் எடுத்த பிறகு அது போய்விடும்.

leading : முன்பகுதி; வரி இடைவெளி : ஒரு வரி அச்சின் அதிக பட்ச கீழ் அளவுக்கும் அடுத்த வரியின் அதிக பட்ச மேல் அளவுக்கும் இடையில் உள்ள செங்குத்து இடைவெளி

leading edge : முன்பக்க விளிம்பு; தலைப்பு முனை : 1. படிப்பியின் அட்டையில் முதலில் நுழையும் துளையிட்ட அட்டையின் விளிம்பு. Trailing edge-க்கு எதிர்ச் சொல். 2. ஒளி நுண்ணாய்வில், படி நிலையில் முதலில் நுழையும் ஆவணம் அல்லது பக்கத்தின் விளிம்பு. 3. தொழில் நுட்பத் தலைமையை உணர்த் தும் அடைமொழிச் சொல்.

leading zeros : முன்னுள்ள பூஜ்யங்கள். தகவலின் எண் மதிப்பைக் கூட்டாத புலத்தை நிரப்பும் பூஜ்யங்கள். சான்றாக, 0001234 என்ற எண்ணில் உள்ள அனைத்து பூஜ்யங்களும் முன்னுள்ள பூஜ்யங்களாகும்.

lead ion battery : ஈய அணியின் மின் கலன் : மின்சக்தியைச் சேமித்து வைக்கும் சாதனம். வேதியல் சக்தியை மின்சாரச் சக்தியாக மாற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. அமில ஊடகத்தில் ஒரு முனையிலிருந்து இன்னொருமுனைக்கு அயனிகள் பாய்கையில் மின் உற்பத்தி நடைபெறுகிறது.

leadless chip carrier : லீட்லஸ் சிப்பு இடைநினைவகம் : நான்கு பக்கங்களிலும் இணைப்புகள் உள்ள தட்டையான சதுர சிப்பு

இருக்கும் இடம்.