பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/844

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

letter translation

843

librarian


வடிவங்களை மற்றொரு வடிவு உயர்த்தித் தோன்றும் வரை எழுத்துகளாகப் படிக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது.

letter translation : எழுத்து மொழி மாற்றம்.

level : நிலை;படித்தளம்; படி நிலை; படிவம் : ஆதிக்க முறை ஒன்றில் அடிபணியும் அளவு. மரம் ஒன்றின் வேருக்கும் அதன் கணுவுக்கும் இடையே உள்ள இடைவெளி.

level, access : அணுகு மட்டம், அணுகுநிலை.

level address, zero : பூச்சிய நிலை முகவரி : அடிநிலை முகவரி.

level language, high : உயர்நிலை மொழி.

level language, low : அடிநிலை மொழி.

lex : லெக்ஸ் : ஒரு மொழிபடிவத்திலிருந்து வேறொரு மொழிக்கு தரவுகளை மாற்றும் தரவு மாற்றல் மென்பொருள்.

lexical anayIsis : சொல்லாக்க ஆய்வு : ஒரு நிரலாக்கத்தொடர் சொற்றொடரின் பல்வேறு பகுதிகளைத் தொகுப்பி அடையாளம் காணும் செயல்முறை.

lexicographic sort : சொல்லாக்க வகைப்படுத்தல் : அகராதியைப்போன்று அகர வரிசையில் வரிசைப்படுத்துதல். அகர வரிசை சொற்களின் மூலம் எண்கள் அமைக்கப்படும்.

lexicon : பேரகராதி : பேரகரமுதலி : எல்லாச் சொற்களுக்கும் விளக்கமளிக்கும் நூல்.

lexicon analyser : சொற் பகுப்பான்.

LF : எல்எஃப் : Line Feed என்பதன் குறும்பெயர்.

LHA : எல்எச். ஏ. : விரைவான, திறன்மிக்க இலவசமாகக் கிடைக்கும் கோப்பு சுருக்கும் பயன்பாடு.

|haro : லாரோ : ஹாருயாக யோஷி சாகி உருவாக்கிய புகழ் பெற்ற இலவச சுருக்கும் நிரல் தொடர். L2W (L277) அகராதி முறையில் மாற்றம் செய்து பயன்படுத்தி ஹஃப் மேன் குறியீட்டு நிலையைத் தொடர்கிறது. பீ. சி., யூனிக்ஸ் மற்றும் பிற தளங்களிலும் இது இயங்க முடிவதன் காரணம் இதன் மூலம் குறியீடு இலவசமாகக் கிடைக்கிறது.

librarian : நூலகர் : 1. தொழில் நுணுக்க ஆவணங்களைப் பராமரிக்கும் பொறுப்பாளர்; நிரல் தொகுப்புகளை

உருவாக்குவோர்; இயக்குவோர் மற்றும் பிற ஊழியர்கள் பயன்படுத்தும்