பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/847

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

light pen

846

Lilo


light pen : ஒளிப்பேனா : ஒரு உள்ளீட்டு சாதனம். கணினித் திரையுடன் இணைக்கப்பட்ட ஒர் எழுத்தாணி. இந்த எழுத்தாணியைக் கொண்டு திரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள

சின்னங்களைச் சுட்டி, எழுத்தாணியின் பக்கவாட்டிலுள்ள ஒரு விசையை அழுத்தித் தேவையானதைத் தேர்வு செய்யலாம். அல்லது எழுத்தாணியால் திரைப்பரப்பைத் தொட்டுத் தேர்வு செய்யலாம். இது, சுட்டி மூலம் தொட்டுச் சொடுக்குவதற்கு இணையானது.

light sensitive : ஒளி உணர்;ஒளி உணரி.

light sensitive screens : ஒளியுணர்வுத் திரைகள்.

lightsource : ஒளி மூலம்;கணினி வரைகலையில் வருவது. முப்பரிமாண பொருளின்மீது ஒளியின் விளைவை போலியாக உரு வாக்க பயன்படுத்தப்படுகிறது. சில நிரல் தொடர்களில் பல் ஒளி மூலங்களைக்கணிப்பிடமுடியும்.

lightwave system : ஒளி அலை அமைப்பு : மிக அதிக வேகத்தில் ஒளி இழைகள் மூலம் ஒளித் துடிப்புகளை அனுப்பும் சாதனம் (நொடிக்கு ஜி-பிட்வரிசை). நகரங்களுக்கிடையிலான தொலைபேசி இணைப்புகள் ஒளி அலை அமைப்புகளாக மாற்றப் பட்டுள்ளன.

Light Weight Directory Access Protocol : குறைச்சுமை கோப்பக அணுகு நெறிமுறை : இது ஒரு பிணைய நெறிமுறை. டீசிபீ/ ஐபீநெறிமுறையுடன் இணைந்து செயல்படும்படி வடிவமைக்கப் பட்டது. எக்ஸ்-500 போன்ற படிநிலைக் கோப்பகங்களில் தகவலைத் தேடிப் பெறப் பயன்படுகிறது. கணினியிலுள்ள தரவு குவிப்பைத் தேடி பயனாளர் பெயர், மின்னஞ்சல் முகவரி, பாதுகாப்புச் சான்றிதழ் அல்லது தொடர்புக்கான பிற தகவல் இவை போன்ற ஒரு குறிப்பிட்ட தகவல் குறிப்பைப் பெறுவதற்கான ஒற்றைக் கருவியை இந்த நெறிமுறை பயனாளர்களுக்கு வழங்குகிறது.

Light Weight Internet Person Schema : குறைச்சுமை இணைய நபர் திட்ட வரை : குறைச்சுமைக் கோப்பக அணுகு நெறிமுறையில், பயனாளர் பெயர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் போன்ற தகவலைப் பெற்றுத் தருவதற்கான வரன்முறை.

LILO : Last in Last out என்பதற்கான குறும்பெயர். வரிசைப் பட்டியல் அல்லது ஒன்றிலிருந்து கடைசியாக இடப்பட்டதை