பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/849

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

line analyzer

848

linear search


மோடெம் போன்ற ஒரு சாதனம். தகவல் தொடர்புக் கம்பியில் அனுப்புவதற்கேற்ற வடிவில் டிஜிட்டல் சமிக்கையை மாற்றுகிறது. இணை/தொடர் மாற்று தலையும், குறிப்பேற்றம் மாடுலேஷன், குறிப்பிறக்க த்தையும் (டீ மாடுலேஷன்) மாற்ற உதவுகிறது.

line analyzer : கம்பி ஆய்வர் : ஒரு தகவல் தொடர்புக் கம்பி அனுப்புவதைக் கண்காணிக்கும் சாதனம்.

linear : நேரான;அடுத்தடுத்த : வரிசையான அல்லது ஒரு நேர்க்கோடான வரைபடத்தைக் கொண்டிருப்பது.

linear addressing architecture;தொடரியல் முகவரியிடல் கட்டுமானம் : ஒற்றை முகவரி மதிப்பைக் கொண்டு ஒரு தனிப்பட்ட நினைவக இருப்பிடம் எதையும் நுண்செயலி அணுகுவதைச் இயல்விக்கும் கட்டுமானம். இதன்படி, முகவரியிடத் தகு நினைவக எல்லை முழுமையிலும் ஒவ்வொரு நினைவக இருப்பிடங்களும் ஒரு தனித்த வரை யறுத்த முகவரியைப் பெற்றுள்ளன.

linear IC : நேர்வழி கிணைந்த சுற்று : டிஜிட்டல் ஒருங்கிணைந்த சுற்றுக்கு எதிரானது.

linear list : தொடரியல் பட்டியல் : உறுப்புகளின் வரிசைமுறைப்படுத்தப்பட்ட ஒரு பட்டியல். இப்பட்டியலில் முதல் உறுப்பு தவிர ஏனைய உறுப்புகள் அனைத்தும் வேறோர் உறுப் பினைத் தொடர்ந்து அடுத்ததாக இடம் பெறும். கடைசி உறுப்பு தவிர ஏனைய உறுப்புகள் அனைத்தும் வேறோர்உறுப்பின் முகவரியைப் பெற்றிருக்கும்.

Linear Programming (L. P) : நீள் நிரலாக்கத் தொகுப்பு தயாரிப்பு : ஒரு பிரச்சினைக்குத் தீர்வாகச் சிறந்த வழி இல்லாத நிலையில் மிகச் சிறந்த கலவை ஒன்றைக் கண்டுபிடிக்கும் உத்தி. இந்த உத்தி குறைந்த செலவில் சிறந்த சத்துள்ள மிக அதிகமான கலோரிகளைத் தரும் உணவுக் கலவையைத் தயாரிப்பது எப்படி என்பதற்குப் பயன்படும். மனிதர்களால் இதற்குத் தீர்வு காண் பதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பதால் இச்சமயங் களில் கணினி வழக்கமாகப் பயன்படுத்தப் படுகிறது.

linear search : நீள் தேடல் : முதல் மூலகத்தில் துவங்கும் தேடல் : பொருந்தக்கூடிய விசை ஒன்றைக் கண்டுபிடிக்கும்வரை அல்லது வரிசையின் இறுதியை அடையும்வரை ஒப்பிடல் தொடர்கிறது.