பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

application gateway

84

application mathem



மொழிகள், அறிக்கை தயாரிப்புக் கருவிகள் உள்ளிட்ட டிபிஎம்எஸ்-ஐ இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

application gateway : பயன்பாட்டு நுழைவாயில் : வெளி உலகுடன் தகவல் போக்குவரத்தில் ஈடுபடக் கூடிய ஒரு நிறுவனத்தின் பிணையக் கணினியிலுள்ள தரவுகளுக்கான பாதுகாப்பினை வழங்கக்கூடிய மென்பொருள் தொகுப்பு.

application generator : பயன்பாட்டு உருவாக்கி : பிரச்சினையின் விவரங்களிலிருந்து பயன்பாட்டுத் தொகுப்பை உருவாக்கும் மென்பொருள். உயர்நிலை கணினி மொழியைவிட ஒன்று அல்லது மேற்பட்ட உயர்நிலையில் உள்ளது. இருப்பினும், நிரலர், சிக்கலான பணிகளை விவரிக்கக் கணித, மொழியமைப்பு விளக்கங்களை அமைத்துத் தர வேண்டும்.

application heap : பயன்பாட்டு நினைவகக் குவியல் : ஒரு பயன்பாட்டுத் தொகுப்பு தனது நிரல் தொடர்களை, விவரக் குறிப்புகளை மற்றும் தேவையான தரவுகளைப் பதிவுசெய்துவைத்துக் கொள்ள ரேம் (RAM) நினைவகத்தில் ஒதுக்கப்படும் பகுதி.

application icon : பயன்பாட்டு சின்னம்; பயன்பாட்டுக் குறு. படம்.

application layer : பயன்பாட்டு அடுக்கு : கணினிப் பிணையங்களில் இரு கணினிகளுக்கிடையே நடைபெறும் தரவுப் பரிமாற்றத்தின் தொழில்நுட்ப நெறிமுறைகளை பன்னாட்டுத் தரநிர்ணய அமைப்பு (lnternational Standards Organisation-ISO) வகுத்துத்துள்ளது. சமிக்கைப் பரிமாற்றங்களுக்குரிய ஒஎஸ்ஐ மாதிரி (OSI Model-Open System Inter connection Model) என்பது முக்கியமான ஒன்று. ஏழு அடுக்குகளைக் கொண்டது. அவற்றுள் பயன்பாட்டு அடுக்கும் ஒன்றாகும். இந்த அடுக்கில்தான் ஒரு தொலைதூரக் கணினியுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும், கோப்புப் பரிமாற்றம் செய்வதற்குமான சமிக்கைகள் அடங்கியுள்ளன. பயனாளருக்கு மிகவும் பயனுள்ள பணியைச் செய்வது இந்த அடுக்குத்தான். ஏழு அடுக்குகளில் ஏனைய கீழடுக்குகள், அனுப்பும்/பெறும் கணினிகளுக்கிடையே தரவு பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றன.

application level : பயன்பாட்டு நிலை.

application mathematics : பயன்பாட்டுக் கணிதம்.