பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/850

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

linear structure

849

line counter


linear structure : வரிசை முறை அமைப்பு : 1. தரவுத் தள நிர்வாக முறைமையில் ஒரு வகை யான கோப்பு அமைப்பு முறை. இதில் ஒவ்வொரு முதன்மை ஆவணமும் ஒரு துணை ஆவணத்தைத் தான் பெற முடியும். முதன்மை ஆவணம், நிரம்பி வழியும் பொழுது கொள்கலனாக துணை ஆவணம் செயல்படுகிறது. 2. புள்ளி விவர ஆவணங்களை நிரல்நிறையாக வரிசைப் படுத்துதல்.

linear video : வரிசைமுறை ஒளிக்காட்சி : ஒளிக்காட்சி நாடா அல்லது ஒளிக்காட்சி வட்டை தொடர்ந்து கீழிலிருந்து மேலாகச் சுற்றுவது.

line art : கோட்டு ஓவியம்.

line at a time printer : ஒரு வரி அச்சுப்பொறி  : ஒரு நேரத்தில் ஒரு வரியை அச்சிடும் அச்சுப் பொறி.

line balancing : வரி சமன் செய்தல்; தடம் சமனாக்கல் : உற்பத்திச் சூழல்களில் பணிகள் கணினி வரைபட பணி நிலையங்களுக்கு சம அளவில் ஒதுக்கி அவற்றின் திறனை உயர்த்துகிற நிர்வாக உத்தி.

line - based browser : வரி அடிப்படையிலான உலாவி : ஒரு வலை உலாவி. இதில் வரை கலைப் படங்களைக் காண இயலாது. உரைப்பகுதி களை மட்டுமே காணமுடியும். செல்வாக்குப் பெற்ற வரி அடிப்படையிலான உலாவி லின்ஸ்க் (Lynx) ஆகும்.

line cap : வரி முடி : குறிப்பாக போஸ்ட்ஸ் கிரிப்ட்டுக்கு ஒத்தியல்பான அச்சுப் பொறியில் ஒரு வரித் துண்டம் அச்சிடப்படும் போது அவ்வரித் துண்டம் முடித்து வைக்கப்படும் முறை.

line chart : கோட்டு வரைபடம் : வணிகத் தரவுகளை x, y அச்சு களிடையே ஒரு கோடாகக் காட்டுதல்.

line circuit : வரிச்சுற்று : சுற்றின் இயற்பியல் வழி தரவு தொடர்பு இணைப்பைப் போன்றது.

line concentration : இணைப்புக் குவியமாக்கம் /ஒருமுகமாக்கம் : பல்வேறு உள்ளிட்டுத் தடங் களைக் குறைந்த எண்ணிக்கையிலான வெளியீட்டுத் தடங்களில் செலுத்துவதற்கான வழி முறை.

Line counter;வரி எண்ணி : அச்சிடப்பட்ட வரிகளின் எண்ணிக்கையைக் கூட்டி பக்கம் அச்சிட வேண்டிய இடத்தை முடிவு செய்யப் பயன்படுத்தப் படும் எண் மாறிலி.


54