பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/851

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

line dot matrix printer

850

line join


line dot matrix printer : வரிப் புள்ளி அச்சுப்பொறி. டாட் மாட் ரிக்ஸ் முறையை பயன்படுத்தும் வரி அச்சுப்பொறி.

line drawing : வரைகோட்டுப் படம் : வடிவத்தின் புற விளிம்பை இடையீடற்ற கோட் டினால் குறிப்பதின் மூலம் பொருள்களை படமாக வரையும் முறை.

line driver : வரி இயக்கி : தனியார் கம்பிகள் வழியாக இணைக்கப்படும் முகப்பு களுக்கும் கணினிகளுக்கும் இடையில் உள்ள அனுப்பும் தொலைவை நீடிக்கப் பயன்படுத்தும் சாதனம். டிஜிட்டல் டிரான்ஸ்மிஷனுக்குப் பயன் படுத்தப்படுவது. கம்பியின் ஒவ்வொரு முனை யிலும் தேவைப்படுகிறது.

line editor : வரி தொகுப்பி : ஒரு நேரத்தில் ஒரு வரி செய்தியை உருவாக்கி மாற்ற அனுமதிக் கும் எளிமையான தொகுப்பு நிரலாக்கத்தொடர்.

Line Feed (LF) : வரிசை உள்ளீடு;வரியூட்டம் : ஒவ்வொரு வரியாக அச்சாளரின் தாளை முன்நோக்கித் தள்ளும் செயல்.

line filter : வரி வடிகட்டி : மின்சாரக் கம்பியில் குறுக்கிடும் மின்காந்த இடையீடுகன்ளை சரி செய்யும் கருவி.

line frequency : வரி அலைவரிசை : கம்பியின் மூலம் ஒரு நொடியில் அலை அல்லது சில சமிக்கைகளின் தொகுதி எத்தனை தடவைகள் அனுப்பப்படுகிறது என்பதைக் குறிப்பிடுவது.

line generator : வரிசை உருவாக்கி : தன்னிச்சையான ஒழுங்குமுறையில் கணினி வரைபட முறையில் வரிகளை உருவாக்கும் வன்பொருள் அல்லது மென்பொருள்.

line graph : கோட்டு வரைபடம் : ஒரு தரவு விவரத் தொகுதியின் அனைத்துத் தரவுகளையும் இணைக்கும் அல்லது இணைக்க முயலும் வரைபடம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் தரவு தொகுதி ஒன்றின் போக்குகளைக் காட்ட கோட்டு வரைபடம் பயன்படுத்தப்படலாம்.

line height : வரி உயரம் : ஒரு வரிசை அச்சுக்களின் உயரம். ஒரு அங்குல உயரத்துக்கு எத்தனை வரிசைகள் என்ற அலகில் கணக்கிடப் படுகிறது.

'line hit : கம்பி பாதிப்பு : சமிக்கையில் தடை ஏற்பட்டு தகவல்தொடர்புக் கம்பியில் அனுப்பப் படும் தரவுகளில் பிழை ஏற்படுதல்.

line join : வரி இணைப்பு : குறிப்பாக

ஒரு போஸ்ட்