பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/855

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

link attribute

854

link testing


தொடர். நிரல் தொடர் மாடுல் கூறுகளிலும், துணை வாலாய (சப்ரொட்டீன்) நூலகங்களிலும் உள்ள குறிப்புகளை இது முறையாக ஒன்றுபடுத் துகிறது. இதன் வெளியீடு கணினியில் ஒட்டு வதற்குத் தயாரான ஏற்றும் கூறாகக் கிடைக்கும்.

link attribute : தொடுப்புப் பண்புக் கூறு.

link designator : தொடுப்புக்குறி கட்டி.

link edit : இணைப்புத் தொகுதி : ஒட்டு வதற்கான நிரலாக்கத் தொடரை உருவாக்க இணைக்கும் தொகுப்பியைப் பயன்படுத்துவது.

linked list : தொகுப்புப் பட்டியல்; தொகுக்கப்பட்ட பட்டியல் : தரவு மேலாண்மையில் பல வகையறாக்கள் பட்டியலிடப்பட்டு ஒவ்வொ ன்றும் அடுத்ததைக் காட்டுவதாக அமைக்கப்படும். தொடர்ந்து பரவாத சேமிப்பு இடங்களில் வரிசை முறையிலான தரவுத் தொகுதிகளை தொகுக்க இது அனுமதிக்கிறது.

Linked Talk Manager : தொடுப்புடைய அட்டவணை மேலாளர்.

linker : இணைப்பாளி : இணைப்பி; பிற நிரல் தொகுப்புகளை அல்லது நிரல் தொகுப்புகளின் பகுதிகளை இணைக்கும். நிரலாக்கத் தொகுப்பு. தனித்தனியான நிரல் தொகுப்பு கற்றைகளை ஒரு செயல்படு நிரல் தொகுப்பாக இணைக்கிறது.

linking loader : இணைப்பேற்றி : பல நிரல் தொகுப்புப் பகுதிகளை இணைக்கக்கூடிய நிர்வாக நிரல் தொகுப்பு. அதன் மூலம் அவை கணினியில் ஒரு அலகாகப் பயன்படுத்த முடியும். முக்கியப் பணிக்குத் துணைப் பணிகள் எளிதாகக் கிடைக்கக் கூடியதாக ஆக்கும் பயனுள்ள மென்பொருள் துணுக்கு.

link language : தொடர் மொழி.

link list : இணைப்புப் பட்டியல்.

link name : தொடுப்புப் பெயர்.

link register : இணைப்புப் பதிவேடு; இணைப்புப் பதிவகம் : தொகுப்பியின் நீட்சியாகச் செயல்படும் ஒரு துண்ம பதிவேடு. இது சுழற்சி அல்லது பணி நிகழ்வின்போது பயன்படுகிறது. கைப் பதிவேடு என்றும் கூறுவார்கள்.

link tables : அட்டவணைகளைத் தொடு.

link testing : இணைப்பு சோதித்தல் : ஒரு புதிய கணினிஅமைப்பு ஏற்கெனவே பயன்பட்டு வரும் ஒன்றுடன் சேருவதற்கு ஏற்றதா