பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/857

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Lips

856

List


பின்னுதவிக்கு மட்டும் கட்டணம் என லினக்ஸை வினியோகிக்கின்றன. கட்டறு மென்பொருள் அமைப்பு (Free Software Foundation) லினக்ஸில் செயல்படக்கூடிய ஏராளமான ஜிஎன்யூ பயன்கூறு களை உருவாக்கியுள்ளது. லினக்ஸ் கெர்னலை வெளியிட்டுள்ளது.

Lips : லிப்ஸ் : Logical inferences per second என்பதன் குறும்பெயர். 5வது தலைமுறை கணினியின் வேகத்தை அளப்பதற்கான அலகு.

Liquid Crystal Display (LCD) : நீர்மப் படிகக் காட்சி : திரவப் படிகக்காட்சி : இரண்டு தாள் துருவமாக்கு பொருளை திரவப் படிகக் கரைசலின் மூலம் இணைத்துக் காட்டும் காட்சி வெளியீடு. மின்னோட்டம் காரணமாக திரவப்படிகள் இணை கின்றன. அதனால் அவற்றின் வழி ஒளி ஊடுருவு வதில்லை; படிமங்கள் தோற்றுவிக்கப் படுகின்றன.

liquid crystal display panel : நீர்ம படிகக் காட்சிப் பாளம்.

Liquid Crystal Shutters : நீர்ம படிக மூடிகள் : மின் ஒளிப்பட வரைபட அச்சுப் பொறியில் உருளைக்கு ஒளியை அனுப்பும் முறை. திரவ படிகப் புள்ளிகள் மூடிகளாகச் செயலிட்டு திறந்து மூடுகின்றன.

liquid plastics : நீர்மக் குழைமம்.

Lisa : லிசா : ஆப்பிள் கணினி நிறுவனத் தினால் உருவாக்கப்பட்ட வணிகத்துக்கான குறுங்கணினி.

Lisp : லிஸ்ப் : List processing என்பதன் குறும்பெயர். மொழியியல் அலசல் பட்டியல்களைக் கொண்ட தரவுகளை வகை செய்வதை முதல் நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட உயர் நிலை நிரல் தொகுப்பு முறைமை. இது உரையைக் கையாளுவதற்கும் ஆய்வு செய்வதற்கும் சிறப்பாக அமெரிக்காவில் செயற்கைப் பகுத்தறிவுக்கான தேர்வு செய்யப்படும் நிரல் தொகுப்பு மொழி.

Lisp machine : லிஸ்ப் கணினி : செயற்கை யான பகுத்தறிவுப் பயன்பாடுகளுக்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்ட கணினி. அதுவும் Lisp மென் பொருளைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக் கப்பட்டது.

list : பட்டி : 1. வரிசை முறைமையற்ற வழியில் தரவுகளைப் பெறுவதற்காக உள்ளடக்க பட்டியல், குறிப்பிட்டுக் காட்டிகளைப் பயன்படுத்தி தரவு களைச் சேர்த்தல் . 2. வரிசைப்