பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/860

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Live 3D

859

loaded line


மற்றும் ஒளிக்காட்சித் தரவுவை இணைய இணைப்பின் மூலம் பெறமுடியும். அவ்வாறில் லாமல் அவை உருவாக்கப்படும் போதே அலைபரப்பச் செய்வது. 3. ஒர் ஆவணத்தை அல்லது ஆவணத்தின் ஒரு பகுதியை பயனாளர் இணையம் வழி பார்வையிடும்போதே மாற்றி யமைக்க வாய்ப்பளிப்பது.

Live 3D : லைவ் 3டி (நிகழ் நேர 3டி) : நெட்ஸ்கேப் நிறுவனத் தின் மென்பொருள். வலை உலாவியுடன் இணைக்கப்பட்ட மெய்நிகர் நடப்பு, உருவார மொழி (Virtual Reality Modelling Language) ஆகும் இணையப் பயனாளர்கள் மெய்நிகர் நடப்பு உலகைப் பார்வையிடவும் ஊடாடவும் அனுமதிக்கும் மென்பொருள்.

live data : நடப்புத் தரவு : நிரல் தொகுப்பு ஒன்றினால் வகைப்படுத்தப்பட வேண்டிய தரவுகள்.

live project : நடப்புத் திட்டம் : நேரடி செய்முறைப் பயிற்சி ; நிகழ்நேரத் திட்டம்.

liveware : உயிர்ப்பொருள் : கணினி மையம் ஒன்றில் உள்ளோர் அல்லது வன்பொருள் மற்றும் மென்பொருள்களைப் பயன்படுத்துவோர்.

. lk : எல்கே : ஒர் இணைய தளமுகவரி, இலங்கை நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

load : ஏற்றி : 1. கணினி ஒன்றின் சேமிப்பிலிருந்து தரவுகளைப் படித்தல். : 2. அட்டை வாசிப் பியில் அட்டைகளை இடல். காகித நாடா வாசிப்பானில் காகித நாடா ஒன்றை இடல் அல்லது வட்டத் தகடு இயக்கும் பிரிவில் வட்டத் தகட்டுத் தொகுப்பை இடல்.

load and go : ஏற்றி இயங்கு : நிரல் தொகுப்பு ஒன்றின் ஏற்றுதல் மற்றும் இயக்கப் பகுதிகளை ஒரே தொடர்ச்சியாக நிகழ்த்தும் இயக்க உத்தி.

loaded line : சுமையேற்று தடம் / இணைப்பு : தகவல் தொடர்புக்கான கம்பித் தடத்தில் மின்னோட்டத்துக்கு ஏற்ப மாறும் மின்தடையைச் சேர்த்து வீச்சுச்சிதைவினை (Amplitude distortion) குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கை. அலை பரப்பு ஊடக மான கம்பி வடத்தில் சுமைச்கருணைகளை (loading coils) இணைப்பது. பெரும்பாலும் ஒரு மைல் தொலைவு இடை வெளிகளில் இவை இணைக்கப்படும்.