பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/861

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

loader

860

local bus


loader : ஏற்றுவி : உள் சேமிப்பில் உள்ள நிரல் தொகுப்புகளை அவற்றை நிறைவேற்ற வகை செய்யும் தயாரிப்பாக படிக்க வகை செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட பணி நிரல்.

loader routine : ஏற்று நிரல் கூறு : இயக்குறு குறிமுறைக் கோப்புகளை நினைவகத்தில் ஏற்றி, இயக்கும் ஒரு நிரல்கூறு. ஓர் ஏற்று நிரல்கூறு இயக்க முறைமையின் ஓர் அங்கமாக இருக்கலாம் அல்லது இயங்கும் நிரலின் ஒரு பகுதியாகவும் இருக்கலாம்.

loader, card : அட்டை ஏற்றி.

load high : மேலே ஏற்று : உயர் நினை வகத்தில் நிரலாக்கத் தொடர்களை ஏற்றுதல்.

loading : பளுவேற்றம்;ஏற்றம் : நிரலேற்றம்.

Load Module : ஏற்றம் கூறு : கணினி இணைப்பினால் உடனடியாக செயல்படுத்தப் பொருத்தமான வடிவில் உள்ள கணினி நிரல் தொகுப்பு.

load point : ஏற்றுப்புள்ளி : மின்காந்த நாடா ஒன்றில் பதிவு துவங்கும் புள்ளி.

load sharing : சுமைப் பகிர்வு : உயர் சுமை நேரங்களில் கூடுதல் வேலையை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகளைப் பயன்படுத்தும் உத்தி. உயர் சுமைக்கும் குறைவான பளு உள்ள நேரங்களில் ஒரு கணினியை மட்டுமே பயன் படுத்துதல் விரும்பத்தக்கது. பிறவற்றை நெருக்கடி நிலைக்கு உதவு கருவியாகப் பயன்படுத்தலாம்.

local : உள்ளமை : 1. அதற்குரிய இடத்தில் உள்ள கணினி ஒன்றின் கருவி தொடர்பானது. 2. நிரலாக்கத் தொகுப்பு ஒன்றின் வரையறுக்கப்பட்ட பகுதியில் பயன்படுத்தப்படும் பொருள்கள் தொடர்பானது.

Local Area Network : LAN : குறும் பரப்பு பிணையம்;சிறு பரப்பு பிணையம்;பகுதி வலைப் பின்னல்;வளாகப் பிணையம் : கட்டடம் ஒன்றில் உள்ள பல்வேறு வன்பொருள் சாதனக் கருவிகளை இணைக்கும் தகவல் தொடர்பு பிணையம். தொடர்ச்சியான கம்பியினால் பிணைக்கப் பட்டிருத்தல் அல்லது கட்டடத்தின் உள்பகுதிக்கான குரல் தரவு தொலைபேசி முறைமையினால் பிணைக்கப்பட்டிருத்தல்.

local bus : உள்ளமைவழித்தடம் : செயலகத் திற்கும் முதன்மை நினைவகத்திற்கும் இடையே வேகமாகவும் அகலமாகவும், இணைப்பை ஏற்படுத் துவது அல்லது வீடியோ ஏற்பி.